டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் மகள் எந்த குற்றமும் செய்யவில்லை... சமூகத்துக்கு நல்லதே செய்தாள்... திஷா ரவியின் தாய் சொல்கிறார்!

Google Oneindia Tamil News

டெல்லி: திஷா ரவி எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் வீட்டுக்கு வந்ததும் கட்டிப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் திஷா ரவியின் தாயார் மஞ்சுலா நஞ்சையா கூறினார்.

திஷா ரவி விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவளித்து சமூகத்திற்கு நல்லது செய்து கொண்டிருந்தாள். எங்கள் குழந்தைகள் சத்தியத்துக்காகவும் நீதிக்காகவும் போராடும்போது நாங்கள் அவர்களுக்கு அருகில் நிற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லி போராட்டம் தொடர்பான 'டூல் கிட்' உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்த திஷா ரவியை போலீசார் க கைது செய்தனர். அவருக்கு நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

குடியரசு தின வன்முறை

குடியரசு தின வன்முறை

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. டெல்லியே பதற்றமானது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறினர்.

 திஷா ரவி கைது

திஷா ரவி கைது

இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே இதற்கிடையே . டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய 'டூல் கிட்' உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக பெங்களூருவை சேர்ந்த 22 வயதான திஷா ரவியை டெல்லி சைபர் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திஷா ரவிக்கு ஜாமீன்

திஷா ரவிக்கு ஜாமீன்

திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். சிறை நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் திஷா ரவி எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் வீட்டுக்கு வந்ததும் கட்டிப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் திஷா ரவியின் தாயார் மஞ்சுலா நஞ்சையா கூறினார்.

சமூகத்துக்கு நல்லது செய்தாள்

சமூகத்துக்கு நல்லது செய்தாள்

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- உண்மை எப்போதும் வெல்லும். என் மகள் எந்த தவறும் செய்யாதபோது நாங்கள ஏன் பயப்பட வேண்டும்? அவள் விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவளித்து சமூகத்திற்கு நல்லது செய்து கொண்டிருந்தாள். எங்கள் குழந்தைகள் சத்தியத்துக்காகவும் நீதிக்காகவும் போராடும்போது நாங்கள் அவர்களுக்கு அருகில் நிற்க வேண்டும். என் மகளுக்கு ஜாமீன் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக சட்டக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமிபிக்கை ஊட்டினாள்

நமிபிக்கை ஊட்டினாள்

நீதித்துறை அமைப்பு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் மகள் எந்த தவறும் செய்யவில்லை என்பதால், அவருக்கு ஜாமீன் கிடைத்துளளதாக நாங்கள் நம்புகிறோம். திஷா ரவி பிறந்த காலத்திலிருந்தே எப்போதும் எங்களுடன் இருந்தாள். அவள் எங்களிடமிருந்து விலகி இருப்பது இதுவே முதல் முறை. அவள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தாள். தொலைபேசியில் பேசும்போது கூட பயப்பட வேண்டாம் என்று எங்களுக்கு பலத்தையும் ஆதரவையும் கொடுத்தாள். அவளுடைய பாதுகாப்பைப் பற்றி மட்டுமே மிகவும் கவலைப்பட்டோம்.

நண்பர்கள் கடவுளின் பரிசு

நண்பர்கள் கடவுளின் பரிசு

திஷாவின் நண்பர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த கடினமான நேரத்தில் அவர்கள் எங்களுடன் இருந்தார்கள். திஷாவின் நண்பர்கள் எங்கள் குடும்பத்திற்கும் திஷாவுக்கும் கடவுளின் பரிசு. என் மகள் வீட்டுக்கு வந்தவுடன் அவளை கட்டிப்பிடிக்க தயாராக உள்ளேன் என்று மஞ்சுலா நஞ்சையா கூறினார்.

English summary
Disha Ravi's mother Manjula Nanjaya said that Disha Ravi had not committed any crime and was ready to hug her when she got home
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X