டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்..பகீர் தகவல்-வீடியோ

    டெல்லி: இந்தியா மீது இன்னொரு மும்பை பாணி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டிருந்தார் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தமது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறித்து விவரித்திருக்கிறார்.

    Manmohan Singh considered to attack Pakistan: David Cameron

    அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மிகவும் புகழ்ந்திருக்கும் கேமரூன் மற்றொரு தகவலையும் பதிவு செய்துள்ளார். அதாவது 2011-ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியதைப் போல இன்னொரு தாக்குதல் நடந்தால் பாகிஸ்தானை தாக்குவது என திட்டமிட்டிருக்கிறோம் என மன்மோகன்சிங் தம்மிடம் கூறினார் என குறிப்பிட்டிருக்கிறார் கேமரூன்.

    என்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்என்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்

    2010-2016-ம் ஆண்டு காலப் பகுதியில் கேமரூன் இந்தியாவுக்கு 3 முறை வருகை தந்திருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடூரத்தை சொல்லும் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்கும் அவர் சென்றிருந்தார். அச்சம்பவத்துக்காக மன்னிப்பும் கோரியிருந்தார் கேமரூன்.

    2013-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் காலத்தில்தான் மோடிக்கு இங்கிலாந்து அரசு விதித்த தடை நீக்கப்பட்டது. அதன்பின்னர் இங்கிலாந்துக்கு 2015-ல் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former UK Prime Minister David Cameron wrote that Former Indian Prime Minister Manmohan Singh considered to attack Pakistan in his memoir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X