டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மன்மோகன் சிங்.. ஓய்வு எடுக்க அறிவுரை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஞாயிற்றுக்கிழமை இரவு நெஞ்சு வலிக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்கிற்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, அவர் இரவு 8.45 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கார்டியோ-தொராசி வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Manmohan Singh has been discharged from AIIMS

ஒரு புதிய மருந்து காரணமாக, மன்மோகன்சிங்கிற்கு பக்க விளைவாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

87 வயதான மன்மோகன்சிங்கிற்கு, இருதயவியல் பேராசிரியர் டாக்டர் நிதீஷ் நாயக் சிகிச்சை அளித்ததாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்தது. இந்த நிலையில்தான், உடல்நலம் தேறிய மன்மோகன்சிங், இன்று மதியம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

அவர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஓய்வு எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக தலைவர்கள் பலரும், மன்மோகன் சிங் உடல்நிலை தேற வேண்டும் என வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தனர்.

"டாக்டர் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர், அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். இந்தியா முழுவதும் நமது முன்னாள் பிரதமருக்காக பிரார்த்தனை செய்கிறது" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன?மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன?

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் ட்வீட்டில்: "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் கவலைப்படுகிறேன். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன் மற்றும் அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறினார்.

மன்மோகன் சிங் இரண்டு இதய-பைபாஸ் அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டவர். ஒன்று 1990 மற்றும் மற்றொன்று 2009ம் ஆண்டு. மன்மோகன் சிங்கிற்கு நீரிழிவு நோயும் உண்டு.

1990களில் பெரும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து நாட்டின், பொருளாதார வளர்ச்சி, பணப் புழக்கத்தை அதிகரித்த பெருமைக்குரிய புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங் ஆவார். 2014ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

English summary
Former Prime Minister Dr Manmohan Singh has been discharged from AIIMS, Delhi on medical advice: AIIMS official
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X