டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்சரிக்கையாக இருங்க மக்களே.. ஆகஸ்ட் 1 முதல் கட்டணத்தை உயர்த்தும் வங்கிகள்.. விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அபராதத்தை உயர்த்த உள்ளன. மேலும் பல்வேறு சேவை கட்டணங்களையும் உயர்த்த உள்ளன. எனவே உங்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை குறைவாக வைக்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு அபராதம் அதிகமாக விதிக்கப்படும். வேறு வங்கி ஏடிஎம் பக்கமும் போக வேண்டாம்.அப்படி போனால் அதற்கும் அதிக கட்டணத்தை கொடுக்க வேண்டியதிருக்கும்.

உங்கள் சம்பளத்தை நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் கட்டாயம் வங்கியில் தான் போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதன்படி அனைத்தும் வங்கிமயமாகிவிட்டது. இப்போது எனவே அனைத்தும் வங்கிமயமான பின்னர் உங்களுக்கு வங்கிகள் அளிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் பணம் வசூலிக்க தொடங்கின.

தங்கத்தின் மீது கடன் கொடுப்பது, தனிநபர் கடன் கொடுப்பது, கிரிடிட் கார்டு அளிப்பது, வணிகத்திற்கு கடன் அளிப்பது, பொருட்கள் வாங்க இஎம்ஐயில் கடன் அளிப்பது என வாகனங்கள் வாங்க கடன் அளிப்பது என ஒவ்வொரு சேவை வழியாக வங்கிகள் வட்டி மூலம் பணத்தை ஈட்டி வந்தன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வங்கியின் உங்கள் பணத்தை ஏடிஎம்மில் எடுப்பபதற்கு காசு வசூலிக்க ஆரம்பித்தன. அதன்பிறகு குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்க ஆரம்பித்தன.

இந்தியாவும் முக்கியம்.. சீனாவும் முக்கியம்.. திடீரென டிரம்ப் எடுத்த முடிவு.. என்ன சொன்னார்? இந்தியாவும் முக்கியம்.. சீனாவும் முக்கியம்.. திடீரென டிரம்ப் எடுத்த முடிவு.. என்ன சொன்னார்?

மினிமம் பேலன்ஸ் கட்டணம்

மினிமம் பேலன்ஸ் கட்டணம்

அந்த வரிசையில் பல சேவைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. அத்துடன் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளன. இதேபோல் சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகை வரம்பையும் உயர்த்த உள்ளன. அத்துடன் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அபராதத்தையும் உயர்த்த உள்ளன.

உயரும் அபராதம்

உயரும் அபராதம்

பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் மாதாந்திர சராசரி இருப்பு தொகை ரூ.1,500 ஆக இருந்தது. இது தற்போது ரூ.2,000 ஆக உயர்த்துகிறது. அதற்கு கீழ் குறைந்தால் கிராமப்புற கிளைகளில் ரூ.20 பெருநகரங்களில் ரூ.75 அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல் இந்த வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் (நடப்பு கணக்கு) வைத்திருப்பவர்கள் மாத சராசரி இருப்பு ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 முறை மட்டுமே இலவசம்

3 முறை மட்டுமே இலவசம்

இதுபோல், பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளத. அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி நிர்வாக இயக்குநர் ராஜீவ் தெரிவித்தார்.

இசிஎஸ் கட்டணம்

இசிஎஸ் கட்டணம்

ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு இதுவரை கட்டணம் வசூலிக்காமல் இருந்த நிலையில் இனி, ரூ.25 வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 ஆகிய குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பேலன்ஸ் பார்த்தால் காசு

பேலன்ஸ் பார்த்தால் காசு

கோடக் மகிந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகளில் 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு பிறகு பணம் எடுக்க ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாம். மேலும் இந்த வங்கி ஏடிஎம்இல் 5 முறைக்கு இனி உங்கள் பேலன்ஸை செக்கிங் செய்தால் ரூ.8.50 வசூலிக்கப்படுமாம். இதுபோல் கணக்குகளுக்கு ஏற்ப பணம் எடுப்பதற்கு 4வது பரிவர்த்தனைக்கு ரூ.100 வசூலிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆர்பிஎல் வங்கியும் குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

English summary
Bank of Maharashtra, Axis Bank, Kotak Mahindra Bank and RBL Bank have imposed charges for cash withdrawal or increased minimum balance requirements effective August 1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X