டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐக்கிய அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்றை போட்டிருக்க வேண்டும்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் துபாய், துருக்கி, ரஷ்யா என பல்வேறு நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வருகின்றன.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்தது. நாட்டில் பரவிய டெல்டா வகை கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் பல்வேறு நாடுகளும் இந்தியப் பயணிகளுக்குத் தடை விதித்திருந்தது.

    ரஷ்யா

    ரஷ்யா

    இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை குறையத் தொடங்கியுள்ள நிலையில் துபாய், துருக்கி, ரஷ்யா என பல்வேறு நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வருகின்றன. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ரஷ்யா சுற்றுலா விசா வழங்குகிறது. பயணம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் RT PCR பரிசோதனையில் நெகடிவ் என இருக்க வேண்டும். அதேபோல ரஷ்யாவில் இறங்கியதும் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்.

    ஐக்கிய அமீரகம்

    ஐக்கிய அமீரகம்

    அதேபோல இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமீரகத்திலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முறையான குடியிருப்பு விசா வைத்திருக்கும் நபர்கள், ஐக்கிய அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்குத் துபாய் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள்

    அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள்

    ஐக்கிய அமீரகம் தற்போது வரை சீனாவின் சினோபார்ம், அமெரிக்காவின் பைசர், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசி ஆகியவற்றுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் எதாவது ஒரு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொள்பவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    பரிசோதனை கட்டாயம்

    பரிசோதனை கட்டாயம்

    மேலும், ஐக்கிய அமீரகத்திற்கு வருவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன், RT PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும். அமீரகத்தில் தரையிறங்கிய பின்னர், மேலும் ஒரு முறை RT PCR பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும்வரை தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்தியப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Array

    Array

    அதேபோல துருக்கி செல்பவர்கள் கட்டாயம் 14 நாட்கள் அல்லது RT PCR சோதனையில் நெகடிவ் முடிவுகள் வரும்வரை தனிமையில் இருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட RT PCR சோதனை முடிவுகளை சமப்ரிக்க வேண்டும்.

    English summary
    Dubai government on Saturday announced updated travel protocols with certain relaxations for inbound passengers from India. Similarly Russia, South Africa also announced that they'll accept Indian passengers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X