டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமை மீது கோபம்.. கட்சிக்கு உள்ளேயே சச்சினுக்கு பெருகும் ஆதரவு.. காங்கிரசில் என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது தற்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே பெரிய பூசலை ஏற்படுத்தி உள்ளது .

ராஜஸ்தான் அரசியல் திருப்பங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது பிளவை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

Recommended Video

    Sachin Pilot has been removed as Rajasthan Deputy Chief Minister

    ராஜஸ்தான் மட்டுமின்றி காங்கிரஸில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பலர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார் .

     சச்சின் பைலட்டின் பதவி சச்சின் பைலட்டின் பதவி "மட்டும்" பறிப்பு.. கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? காங்கிரஸ் போட்ட திட்டம்!

    எதிர்த்து உள்ளனர்

    எதிர்த்து உள்ளனர்

    கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இதை எதிர்த்து இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பிரியா தத், ஜிதின் பிரசாத்தா ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளனர். கட்சி தலைமையின் இந்த முடிவை அவர் எதிர்க்கவில்லை. ஆனாலும் கட்சியின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளனர்.

     சல்மான் குர்ஷித்

    சல்மான் குர்ஷித்

    அதேபோல் இன்னொரு பக்கம் காங்கிரஸின் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் இந்த செயலை பார்த்து வருத்தம் அடைந்து இருக்கிறார். என்னுடைய நண்பர் ராஜேஷ் பைலட்டின் மகன் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை. அவர் மீது கட்சி இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று நினைக்கவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    வேறு யார்

    வேறு யார்

    இந்த நிலையில் சச்சின் பைலட்டிற்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா தற்போது அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். சஞ்சய் ஜா தொடந்து சச்சின் பைலட்டிற்கு ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இது தொடர்பாக அவர் நிறைய டிவிட்களை செய்து இருந்தார். இதுதான் அவர் நீக்கத்திற்கு காரணம் என்கிறார்கள்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    சஞ்சய் ஜா தனது டிவிட்டில், ஐந்து வருடமாக சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையாக உழைத்தார். ரத்தம் சிந்தினார். 2013-2018 வரை கட்சியை சிறப்பாக வளர்த்து கொண்டு வந்தார். 21 இடங்கள் வென்ற காங்கிரசை 100 இடங்கள் வெல்ல வைத்தார். நாம் அவருக்கு செய்து இருக்கும் பதில் உபகாரம் இதுதான் என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.

    முன்பே இப்படி

    முன்பே இப்படி

    இதுதான் அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்க காரணம் என்றும் கூறுகிறார்கள். கடந்த மாதம்தான் இவரின் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது.காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்ததால் அப்போது அவரின் பதவி பறிக்கப்பட்டது. இவர் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்தார். தற்போது அவர் கட்சியில் நீக்கப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் தரப்பு காரணம் எதையும் சொல்லவில்லை.

    இன்னும் பலர்

    இன்னும் பலர்

    இவர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள் இன்னும் பலர் இந்த நீக்கம் காரணமாக அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகிறார்கள். கட்சிக்காக உழைத்த ஒரு இளைஞருக்கு இதுதான் வெகுமதியா ? அவர்தான் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணம். அவருக்கே இந்த நிலைமையா என்று கட்சிக்குள் பல தலைவர்கள் கொதிக்க தொடங்கி உள்ளனர்.கட்சியின் தலைமை மீது அவர்கள் வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Many leaders inside the Congress party start supporting Sachin Pilot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X