டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாயாவதியை கொஞ்சம் பார்க்கணும்.. வரிசையில் காத்திருக்கும் உயர் அதிகாரிகள்.. அதிரடி திருப்பம்!

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்திக்க தேசிய அளவில் உயர் அதிகாரிகள் பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாயாவதியை பார்க்க காத்திருக்கும் உயர் அதிகாரிகள்

    டெல்லி: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்திக்க தேசிய அளவில் உயர் அதிகாரிகள் பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. நாளை லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் தேசிய அளவில் அரசியலில் வரிசையாக நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதன் ஒருபடியாக தற்போது பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை பார்க்க பல அதிகாரிகள் ஆவலாக காத்து இருக்கிறார்கள்.

    அனுமதி கேட்டனர்

    அனுமதி கேட்டனர்

    நேற்றுதான் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்திக்க 15க்கும் அதிகமான உயர் அதிகாரிகள் அனுமதி கேட்டு இருந்தனர். நேற்று மாலை இந்த அதிகாரிகள் வரிசையாக மாயாவதியை சந்தித்து உள்ளனர். லக்னோவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில் சில ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மத்திய பட்டியல்

    மத்திய பட்டியல்

    மாயாவதியை சந்தித்தவர்களில் சிலர் மத்திய பட்டியலை சேர்ந்த அதிகாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சந்திப்பிற்காக காரணம் என்ன என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மாயாவதியை சந்திக்க வேண்டும் என்று இன்றும் சில அதிகாரிகள் அனுமதி கேட்டு உள்ளனர். இன்று மாலை முக்கிய மத்திய பட்டியல் அதிகாரிகளை மாயாவதி சந்திக்க உள்ளார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    தேசிய அளவில் இந்த சந்திப்பு பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது. மாயாவதி லோக்சபா தேர்தலில் 20 இடங்களுக்கும் அதிகமாக வெல்வார். எதிர்க்கட்சிகளின் சார்பாக இவர் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்று கூறுகிறார்கள். இதனால் இப்போதே இவர்களை அதிகாரிகள் சந்திக்கிறார்களா, இப்போதே இடம் பிடித்து வைத்துக் கொள்கிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

    மாயாவதி எப்படி

    மாயாவதி எப்படி

    பொதுவாக மாயாவதி முதல்வராக இருந்த போது உத்தர பிரதேச அதிகாரிகளிடம் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். இதனால் முன்கூட்டியே உஷாராகி, உயர் அதிகாரிகள் அவரை சந்திக்கிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த 10 வருடமாக மாயாவதி பெரிய பதவி எதிலும் இல்லை, ஆனாலும் இவ்வளவு நாளுக்கு பின் இவருக்கு தற்போது இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Many officials including IAS and IPS officers are trying to meet Mayawati a day before election results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X