டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன ஆச்சு காங்கிரசுக்கு.. ஒன்னும் சரியில்லையே.. வரிசையாக கழன்று ஓடும் காங்கிரஸ் இன்ஜின்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசில் இருந்து வரிசையாக வெளியேறும் தலைவர்கள்- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபா தேர்தலுக்கு பிறகு நேரம் சரியில்லை போலும். ஒருவர்பின் ஒருவராக முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள். அதன் லேட்டஸ்ட் உதாரணம்தான், திவ்யா ஸ்பந்தனா.

    சமீபத்தில் நிறைவடைந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளை மட்டுமே வென்று, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாமல் போனது. காங்கிரசின் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, அக்கட்சியின் செயற்குழு கூட்டம் உட்பட பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் அப்செட்டை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில், தனது பதவியை ராஜினாமா செய்யக்கூட அவர் முன்வந்தார். அதை ஏற்க காங்கிரஸ் செயற்குழு மறுத்துவிட்டது. இருப்பினும் ராகுல் காந்தி கோபம் குறையவில்லை.

    10 நாளா தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது.. கும்பகோணத்தில் குடங்களுடன் ஆவேச சாலை மறியல் 10 நாளா தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது.. கும்பகோணத்தில் குடங்களுடன் ஆவேச சாலை மறியல்

    திவ்யா ஸ்பந்தனா

    திவ்யா ஸ்பந்தனா

    இந்த நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகி வருகிறார்கள். அதில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது, திவ்யா ஸ்பந்தனா. காங்கிரஸ் கட்சியின் சோஷியல் மீடியா பிரிவு தலைவராக இருந்த பிரபல நடிகையான இவர், தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். டிவிட்டரில் இருந்து வெளியேறிவிட்டார்.

    காங்கிரஸ் நிர்வாகி

    காங்கிரஸ் நிர்வாகி

    காங்கிரஸ் ஐடி பிரிவு நிர்வாகியான சிராக் பட்நாயக்கும், டிவிட்டரை விட்டு வெளியேறிவிட்டார். பட்நாயக் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரும் சமூக வலைத்தளத்தை புறக்கணித்துள்ளார்.

    செய்தித் தொடர்பாளர்கள்

    செய்தித் தொடர்பாளர்கள்

    இது மட்டும் கிடையாதுங்க. காங்கிரஸ் கட்சியின் முக்கியமான செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த பிரியங்கா சதுர்வேதியும், அந்த கட்சியிலிருந்து விலகி, சிவசேனா கட்சியில் ஐக்கியமாகிவிட்டார். இவ்வாறு கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியவர்கள், ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து கருத்து சொல்ல வேண்டியவர்கள் எல்லோரும் காங்கிரசை கைவிட ஆரம்பித்துள்ளது அந்த கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கட்சித்தாவல்

    கட்சித்தாவல்

    பொதுத் தேர்தல் முன்பாகவே கட்சித் தாவல் ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் சீனியர் தலைவராக இருந்த டாம் வடக்கன், பாஜகவில் இணைந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். பட்ட காலிலேயே படும்.. கெட்ட குடியே கெடும் என்று தமிழில் ஒரு பேச்சு வழக்கு உள்ளதே. அது, காங்கிரசுக்கு பொருந்தும்.

    English summary
    Many prominent leaders from the Congress left the party after lok sabha debacle, shock party leaders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X