டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரசை உருவாக்கி.. அமெரிக்காவை வீழ்த்தி.. சீனா செய்த கேம்பிளான்.. வைரல் மெசேஜ் உண்மையா?

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா கொரோனா வைரசை உற்பத்தி செய்து அதை பரப்பி வருவதாக, சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உலகளாவிய அளவில், பங்குச் சந்தைகள் சரிவடைந்தாலும், சீனாவில் பங்குச் சந்தை சரிவடையவில்லை என்றெல்லாம் மெசேஜ்கள் பரவுகின்றன.

Recommended Video

    சீனா உலகை எச்சரிக்காதது ஏன்? என்ன நடந்தது

    சீனாதான் இந்த வைரசை பரப்பியதா, என்பது குறித்து வெளியாகும் மெசேஜ்களையும், அதன் உண்மைத்தன்மையையும் பார்க்கலாம் இதோ:

    Many says China is create and spreading coronavirus, but that is not true

    என்ன ஒரு கேம் பிளான் என்ற பெயரில், ஒரு மெசேஜ் வைரலாக சுற்றி வருகிறது. அதில் சீனா கொரோனா வைரசை திட்டமிட்டு பரப்பியதாக, கூறி வரிசையாக சில ட்வீட்டுகள் வெளியாகியுள்ளன.

    ஸ்டேஜ் 1: ஒரு வைரஸை உருவாக்கி உள்நாட்டில் சோதிக்கவும்.

    ஸ்டேஜ் 2: உலகளவில் வைரஸை பரப்புங்கள், குறிப்பாக, சுற்றுலா தலங்களை குறிவைத்து செய்யுங்கள். WHOஐயும் கைக்குள் வைத்துக்கொண்டு, இந்த விஷயத்தை வெளியே கசியவிடாமல் இது ஆபத்தான வைரஸ் இல்லை என சொல்ல வைக்க வேண்டும்.


    ஸ்டேஜ் 3: சுற்றுலா தலங்கள் உலகம் முழுவதும் வைரஸ் பரவ உதவும். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா

    ஸ்டேஜ் 4: உலகளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காத்திருங்கள். ஆனால், இதற்கு இடையே, சீனாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையவில்லை.

    ஸ்டேஜ் 5: உள்நாட்டில், உலக சந்தைகளுக்கான உற்பத்தியைத் தொடங்குங்கள். அந்த உற்பத்தி பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் நடக்கும். பெய்ஜிங் மற்றும் ஷாங்காயை கொரோனா வைரஸ் அதிகம் அடையவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

    ஸ்டேஜ் 6: இப்போது சில போட்டியாளர்கள் விளையாட்டை உணர்ந்தனர்

    ஸ்டேஜ் 7: இப்போது பொருளாதாரம் மற்றும் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான கேம் பிளான், இதை அம்பலப்படுத்துவதன் மூலம் வீழ்ச்சியடையும். இப்படி நீள்கிறது அந்த மெசேஜ்.

    இதுபோன்ற மெசேஜ்கள் சமூக வலைத்தளத்தில் அதிகரித்துள்ள நிலையில்தான், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங், சீன மக்களை குறிவைப்பதை விட, தொற்றுநோய்க்கு சீனா வழங்கிய அதிவேக சிகிச்சையை சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார். எனவே ஆதாரமில்லாத இந்த தகவல்களை பரப்ப வேண்டாம் என்பது அவரது கோரிக்கை.

    English summary
    Many says China is create and spreading coronavirus, but that is not true, says envoy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X