டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த 5 நாட்கள்.. நாடு முழுக்க பல மாநிலங்களில் தீவிர கனமழை.. ஒடிசா, சட்டீஸ்கருக்கு ரெட் அலர்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலின் வடக்கு பகுதியில் ஒடிசா அருகே தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடகிழக்கு திசையில் நகர வாய்ப்புள்ளது.

அடுத்த ஐந்து நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்லும். இதன் காரணமாக வடமாநிலங்களில் மிக தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தங்க கடத்தல் புகார்.. கேரள தலைமைச்செயலகத்தில் திடீர் தீ விபத்து.. எதிர்க்கட்சிகள் சந்தேகம்!

எங்கு மழை

எங்கு மழை

கிழக்கு, வடக்கு, மத்திய இந்திய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக கனமழை பெய்யும். நாளை காலையில் இருந்து இந்த மாவட்டங்களில் 30ம் தேதி வரை தீவிர கனமழை பெய்யும்.

மிக தீவிர மழை

மிக தீவிர மழை

அதேபோல் ஒடிசாவில் 26-27 தேதிகளில் மிக தீவிர கனமழை பெய்யும். சட்டீஸ்கர் மாநிலத்தில் 27ம் தேதி மிக தீவிர கனமழை பெய்யும். இதனால் ஒடிசாவுக்கு ஆகஸ்ட் 26 அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் இருக்கும் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர் மழை

சட்டீஸ்கர் மழை

சட்டீஸ்கருக்கு ஆகஸ்ட் 27 அன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு மாநிலங்களிலும் மிக தீவிரமாக காற்று வீசும். பலத்த சூறாவளி காற்று இரண்டு மாநிலங்களிலும் வீசும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

அதேபோல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தர பிரதேசம், சிக்கிம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்லி, லடாக், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும். தமிழகத்தில் நாளை லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

English summary
Many states will see Heavy rain for next 5 days: Red alert for Odisha and Chhattisgarh says IMD.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X