டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி- பிரியங்கா உள்ளிட்ட காங். தலைவர்கள் கைது!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தி உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ஜனாதிபதி மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக 25 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உறைபனியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்தும் உள்ளனர் விவசாயிகள்.

March to Rashtrapati Bhawan against Farm Laws- Priyanka Gandhi and Congress leaders detained

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்பு, உண்ணாவிரதம் என பல போராட்டங்களையும் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் விவசாய சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

இந்த 2 கோடி கையெழுத்துகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கொடுப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் அக்கட்சித் தலைவர்கள் பேரணியாக சென்றனர். ஆனால் இந்த பேரணியை டெல்லி போலீசார் நடுவழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

மேலும் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தி உட்பட 3 பேர் மட்டுமே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டது.

English summary
Congress leaders hold March to Rashtrapati Bhawan against Farm Laws. But Priyanka Gandhi and Congress leaders detained by Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X