டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலவரத்திற்கு காரணம்.. கபில் மிஸ்ராவின் பேச்சை குறிப்பிட்ட மார்க் சூக்கர்பெர்க்.. வெடித்தது சர்ச்சை!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி கலவரத்தை தூண்டிவிட காரணமாக இருந்ததாக பாஜகவின் இளம் தலைவர் கபில் மிஸ்ராவின் பேச்சை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் குறிப்பிட்டு இருக்கிறார். மார்க் சூக்கர்பெர்க் நேரடியாக கபில் மிஸ்ராவின் பெயரை குறிப்பிடாமல், அவர் பேசியதை மட்டும் கூறி இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் முழுக்க டெல்லியில் மிக தீவிரமாக சிஏஏ போராட்டங்கள் நடந்தது. அப்போது டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டம் செய்து வந்தனர்.

அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இது தொடர்பாக வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

டோக்லாமில் வாங்கிய அடி.. லடாக் பிரச்சனையில் வாயை திறக்காத சீன ஊடகங்கள்.. மௌனத்தின் பின்னணி!டோக்லாமில் வாங்கிய அடி.. லடாக் பிரச்சனையில் வாயை திறக்காத சீன ஊடகங்கள்.. மௌனத்தின் பின்னணி!

என்ன பேச்சு

என்ன பேச்சு

இந்த துப்பாக்கி சூட்டிற்கு பாஜகவின் இளம் தலைவர் கபில் மிஸ்ராவின் பேச்சுதான் காரணம் என்றும் புகார் வைக்கப்பட்டது. அவர் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவதாக புகார் வைக்கப்பட்டது. அவர் தனது பேச்சில், ஷகீன் பாக் மிக சிறிய பாகிஸ்தான். அங்கு போராடும் மக்களை அடித்து விரட்ட வேண்டும். அவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள். அவர்களை போலீஸ் விரட்டவில்லை என்றால், என்னுடைய ஆட்கள் உள்ளே சென்று விரட்டுவார்கள் என்று குறிப்பிட்டார். இவரின் இந்த பேச்சை தொடர்ந்துதான் அங்கு கலவரமும் நடந்தது.

மார்க் என்ன சொன்னார்

மார்க் என்ன சொன்னார்

இந்த நிலையில் டெல்லி கலவரத்தை தூண்டிவிட காரணமாக இருந்ததாக பாஜகவின் இளம் தலைவர் கபில் மிஸ்ராவின் பேச்சை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் குறிப்பிட்டு இருக்கிறார். மார்க் சூக்கர்பெர்க் நேரடியாக கபில் மிஸ்ராவின் பெயரை குறிப்பிடாமல், அவர் பேசியதை மட்டும் கூறி இருக்கிறார். அமெரிக்காவில் தற்போது ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட காரணத்தால் போராட்டம் நடந்து வருகிறது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் பேஸ்புக் போஸ்ட்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

டிரம்ப் டிவிட் நீக்கம்

டிரம்ப் டிவிட் நீக்கம்

இதில் டிரம்பின் சில பேஸ்புக் போஸ்ட்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. ஆனால் இதை பேஸ்புக் நீக்கவில்லை. இதை ஏன் பேஸ்புக் நீக்கவில்லை என்று மார்க் சூக்கர்பெர்க் விளக்கம் கொடுத்தார். அதில், பேஸ்புக்கிற்கு நிறைய விதிமுறைகள் இருக்கிறது. டிரம்ப் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இல்லை. அவர் அரசு அதிகாரம் பற்றி மட்டுமே பேசினார். அதனால் அவரின் போஸ்டை நீக்கவில்லை.

Recommended Video

    உங்கள் பேஸ்புக் பயன்பாட்டை கணக்கிட வரும் புதிய வசதி- வீடியோ
    என்ன உதாரணம்

    என்ன உதாரணம்

    உதாரணமாக இந்தியாவில் ஒரு அரசியல் தலைவர் தனது பேச்சில் ''போராடும் மக்களை அடித்து விரட்ட வேண்டும். அவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள். அவர்களை போலீஸ் விரட்டவில்லை என்றால், என்னுடைய ஆட்கள் உள்ளே சென்று விரட்டுவார்கள்'' என்று குறிப்பிட்டார். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. இதை போன்ற பேச்சுக்கள்தான் கலவரத்தை தூண்டும் பேச்சுக்கள். அதை மட்டுமே நாங்கள் நீக்குவோம் என்று மார்க் கூறியுள்ளார்.

    மிக மோசம்

    மிக மோசம்

    அதாவது கபில் மிஸ்ராவின் பெயரை குறிப்பிடாமல் அவரின் பேச்சை குறிப்பிட்டு இப்படி மார்க் பேசி இருக்கிறார். இதனால் மார்க்கிற்கு எதிராக இணையத்தில் பாஜகவின் கொந்தளித்து உள்ளனர். அதே சமயம் அவர் கபில் மிஸ்ரா பெயரை நேரடியாக சொல்லவில்லை. அவர் பொதுவாக பேசி இருக்கிறார். கபில் மிஸ்ராவை தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டாம் என்றும் இணையத்தில் கருத்துக்கள் உலவி வருகிறது.

    English summary
    Mark Zuckerberg quotes Kapil Misra speech to say an example for incitement speech in Facebook meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X