டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி மாருதி ஆம்னியை ரோட்ல பார்க்க முடியாது மக்களே.. தயாரிப்பை நிறுத்த மாருதி முடிவு!

மாருதி சுசுகி நிறுவனம் தனது மாருதி ஆம்னி காரின் தயாரிப்பை நிறுத்த முடிவெடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: மாருதி சுசுகி நிறுவனம் தனது மாருதி ஆம்னி காரின் தயாரிப்பை நிறுத்த முடிவெடுத்து இருக்கிறது.

பிரபல மாருதி நிறுவனத்தின் ஆம்னி கார் இந்தியா முழுக்க பிரபலம். கோலிவுட் படங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் கார்களில் மாருதி ஆம்னி காரும் ஒன்று.

Maruti Suzuki gonna shuts down the production of Omni after 2020

படத்தில் வரும் கடத்தல்காரர்கள் பயன்படுத்த வேண்டும் என்று நேந்து விடப்பட்ட வாகனமாக இது இருந்தாலும், 90ஸ் 80ஸ் கீட்ஸுகளுக்கு அத்தனை நெருக்கமானது. வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த வாகனம் பலருக்கும் பேவரைட்.

இந்த நிலையில் ஆம்னி காரின் தயாரிப்பை நிறுத்த போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 தொடக்கத்தில் மொத்தமாக தயாரிப்பது நிறுத்தப்படும் என்றுள்ளது. இப்போதில் இருந்து தயாரிப்பை குறைக்க முடிவெடுத்துள்ளது.

2020ல் கொண்டு வரப்பட உள்ள பாதுகாப்பு விதிகளை இந்த கார் பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாக இந்த வாகனத்தின் தயாரிப்பை நிறுத்த இருக்கிறார்கள். 1984-ம் ஆண்டில் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தனை வருடமாக சாலைகளில் முக்கிய இடத்தை கார் பிடித்து இருந்தது. 800 cc இன்ஜின் கொண்ட வாகனங்களில் பலருக்கு இது பேவரைட் காராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Maruti Suzuki gonna shuts down the production of Omni after 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X