டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மசூத் அசார் விவகாரத்தில் கடைசி காட்சியை மட்டும் மோடி காட்டுகிறார்... ப.சிதம்பரம் காட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: மசூத் அசாருக்கு முன்பே, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இரண்டு பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா., அறிவித்தது. இது பிரதமர் மோடியின் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைக்கும், இந்தியாவின் முயற்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி என கூறப்படுகிறது.

Masood Azhar is not the first person as global terrorists says P Chidambaram

புல்வாமா தாக்குதலை நடத்திய , மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து, ஐ.நா.,வில் விவாதம் நடந்த போது, சீனா ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. சீனா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா., அறிவித்தது. ஆரம்பத்தில், ஆட்சேபம் தெரிவித்த, சீனாவிற்கு உலக நாடுகள் மூலம் இந்தியா நெருக்கடியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் விவாததிற்கு உள்ளாகி உள்ளது, இந்த விவகாரம். இந்தநிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக அவை தலைவர் மதுசூதனனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி அதிமுக அவை தலைவர் மதுசூதனனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

அப்போது, ஹபீஸ் சயீத், லக்வியை மறந்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சியின் போது, இருவரும் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டினார். மசூத் அசார் ஒன்றும் முதல் நபர் இல்லை என்றும் கூறினார்.

2009-ல் மசூத் அசார் என்ற பெயரை சர்வதேச தீவிரவாதியாக குறிப்பிட்டோம். ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, திரு. மோடி அவர்கள் கடைசி கதையைப் பற்றி மட்டுமே பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார். மசூத் அசார் விவகாரம் ஒரு திரைப்படம் போல் சென்று கொண்டு இருக்கிறது. அதில், கடைசிக் காட்சியை மட்டும் பார்த்தால் எப்படி? முந்தைய காட்சியையும் திரும்பி பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

English summary
We started the process in 2009 to name Masood Azhar as global terrorist, 10 years later process is complete. Mr Modi is only talking about last scene of the story
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X