டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிவிஸ்ட்.. காங்கிரஸை சரியான இடத்தில் லாக் செய்த மாயாவதி.. பிரதமர் பதவிக்கு அடிபோடுகிறாரா?

நடந்து வரும் லோக்சபா தேர்தலில் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இப்போதே காங்கிரஸ் கட்சியை லாக் செய்ய தொடங்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha elections 2019 | தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா? உ.பியில் மாயாவதியின் திட்டம்

    டெல்லி: நடந்து வரும் லோக்சபா தேர்தலில் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இப்போதே காங்கிரஸ் கட்சியை லாக் செய்ய தொடங்கி உள்ளார்.

    தற்போது நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட லோக்சபா தேர்தல்கள் நடந்து முடிந்து இருக்கிறது.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி வரும், யார் ஆட்சி அமைக்க போவது, யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும், தொங்கு பாராளுமன்றம் உருவாகுமா என்பது குறித்த பல விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மிக முக்கியமான தலைவராக உருவெடுத்து இருக்கிறார்.

    மிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு! மிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு!

    ஏன் மாயாவதி

    ஏன் மாயாவதி

    உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. இந்தியாவில் வலுவான கூட்டணி இதுதான் என்று கூறுகிறார்கள்.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    இந்த லோக்சபா தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை. ஆனாலும் இவர் பிரதமர் ஆகும் எண்ணத்தில் இருக்கிறார் என்று சில தகவல்கள் ஏற்கனவே வந்தது. இந்த நிலையில்தான் இவர் தற்போது காங்கிரஸ் கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்க தொடங்கி உள்ளார். லோக்சபா தேர்தலில் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால் மாயாவதி இப்போதே காங்கிரஸ் கட்சியை லாக் செய்ய தொடங்கி உள்ளார்.

    என்ன பின்புலம்

    என்ன பின்புலம்

    ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் 231 இடங்களில் காங்கிரஸ் கட்சி 113ல் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. இதனால் 2 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது. அதேபோல் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டிக்கு தேவையான 100 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அங்கு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 6 பேர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    என்ன செய்து வருகிறார்

    என்ன செய்து வருகிறார்

    இந்த நிலையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து இருக்கும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மாயாவதி மிரட்டல் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து மீண்டும் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் வெளிப்படையாக டிவிட் செய்துள்ளார். லோக்சபா தேர்தல் முடிவை எதிர்நோக்கி அவர் இப்படி டிவிட் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

    என்ன யோசனை

    என்ன யோசனை

    அதன்படி லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும். இதனால்தான் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதே மாயாவதி இரண்டு மாநிலங்களில் லாக் வைத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    இதனால் தேர்தலுக்கு பின், மாயாவதி பிரதமர் பதவிக்கு முயற்சிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனும் மாயாவதி ஆட்சி பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது. அதனால்தான் தற்போது அவர் மற்ற கட்சி தலைவர்களுடன் தீவிர நட்பில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    English summary
    BSP chief Mayawati plans for PM post, Locks Congress party in an unexpected place scenario.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X