டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2014 –ல் டீ விற்பனையாளர் 2019 –ல் காவலாளி.. மோடியைக் கலாய்க்கும் மாயாவதி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமரின் சவுகிதார் கோஷம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கடந்த வாரம் மோடி தனது டிவிட்டர் கணக்கின் பெயரை சவுகிதார் நரேந்திர மோடி என்று மாற்றம் செய்திருந்தார். முன்னதாக ராகுல்காந்தி ரஃபேல் விவகாரத்தில் இந்த தேசத்தின் காவலர் ஒரு திருடன் என்று மோடியை விமர்சித்திருந்த நிலையில் தான் மட்டும் காவலன் அல்ல இந்த நாட்டு மக்கள் அனைவருமே காவலர்கள் என்று ட்விட்டரில் கூறியிருந்தார் மோடி. இதனையடுத்து பாஜகவின் முன்னணித் தலைவர்கள் அனைவருமே தங்களது டிவிட்டர் கணக்கில் தங்களது பெயர்களுக்கு முன்னாள் சவுகிதார் என்று பெயர் மாற்றம் செய்திருந்தனர்.

Mayawati teases Modi

சவுகிதார் என்ற இந்த பெயர் மாற்றம் எதிர்க்கட்சி தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விமர்சித்த ராகுல் பிரதமர் மோடி தான் மாட்டிக் கொண்டதும் நாட்டு மக்கள் அனைவரையும் காவலர்கள் என இந்த வட்டத்திற்குள் இழுத்து விட்டுவிட்டார் என்று கூறியிருந்தார்.

டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடந்த 2014 ம் ஆண்டு டீ விற்பனையாளராக இருந்த மோடி 2019 ல் காவலாளியாக மாறியுள்ளார். பாஜக ஆட்சியில் இந்தியா மாறிவருகிறது என்று கூறப்படுவது இதைத்தானா என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்ட அவர் இந்த மாற்றம் தன்னை பிரமிக்க வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல் அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்

பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சில ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த திருட்டுக்கு காவலாளி மோடி பொறுப்பேற்பாரா என்று கேள்வி கேட்டுள்ளார் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ். மோடி பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக உள்ளார் என்று விமர்சித்துள்ளார் பிரியங்கா காந்தி

தங்கள் குழந்தைகள் காவலாளியாக பார்க்க விரும்பினால் மோடிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருபுறம் சவுகிதாரை கிண்டல் மற்றும் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் நெட்டிசன்கள் சமூக வலை தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்

English summary
BSP president Maywati has blasted PM Modi for his Chowkidar campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X