டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தேர்வு முறையும் அதிரடி மாற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    The Medical Council of India has revised the curriculum and examination pattern of the MBBS course

    டெல்லி: எம்பிபிஎஸ் படிப்பு காலம் 54 மாதத்தில் இருந்து 50 மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்வு முறையையும் அதிரடியாக மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளது.

    மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்பின் காலம் தற்போது 54 மாதங்களாக உள்ள நிலையில் 50 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டில்13 மாதங்கள், 2ம் ஆண்டில் 11 மாதங்கள் என்றும் 3ம் ஆண்டு 12 மாதங்கள், 14 மாதங்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    பாடத்திட்டத்தை பொறுத்த வரையில், இனி ஒவ்வொரு பாடத்திற்கும் 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, செய்முறை பயிற்சித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

    200 மதிப்பெண்

    200 மதிப்பெண்

    தற்போது, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரே தாள் மட்டுமே உள்ளது. அதில்,எழுத்து தேர்வுக்கு 100 மதிப்பெண், வாய்மொழித் தேர்வுக்கு 20 மதிப்பெண், செய்முறை மற்றும் உள் மதிப்பீட்டு தேர்வுக்கு தலா 40 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது.

     300 மதிப்பெண்

    300 மதிப்பெண்

    இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2 தாள்களின் எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், செய்முறைப் பயிற்சி, வாய்மொழித் தேர்வு அல்லது கிளினிக்கல் தேர்வுக்கு 100 மதிப்பெண்ணும் என மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டில் கற்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவம் மூன்றாம் ஆண்டில் சேர்க்கப்படுகிறது

    உள்மதிப்பீடு

    உள்மதிப்பீடு

    ஒரு மாணவர் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைப் பயிற்சி தேர்வு ஆகியவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அப்போதுதான், பல்கலைக் கழகத் தேர்வுக்கு தகுதி பெற இயலும். பல்கலைக் கழக தேர்வில் ஒரு மாணவர் எழுத்து, செய்முறை பயிற்சித் தேர்வில் 50 சதவீதம் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். உள்மதிப்பீடு மதிப்பெண், பல்கலைக் கழக தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படாது.

    மருத்துவ கவுன்சில்

    மருத்துவ கவுன்சில்

    இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. அதேநேரம். முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என அகில இந்தியமருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

    English summary
    The Medical Council of India (MCI) has revised the curriculum and examination pattern of the MBBS course.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X