டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்சிஏ படிப்பு இனி இரண்டு வருட படிப்பு.. மாறும் பாடத்திட்டம்.. ஏஐசிடிஇ அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக மாற்றி அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், யூஜிசி/ஏஐசிடிஇ விதிகளின் படி இதுவரை எம்சிஏ எனப்படும் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பு இதுவரை மூன்று ஆண்டுகளாக இருந்த நிலையில் இனி இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.

கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. மாஸ்க் கட்டாயம், பொதுக்கூட்டங்களுக்கு தடைகேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. மாஸ்க் கட்டாயம், பொதுக்கூட்டங்களுக்கு தடை

முன்னதாக பல்கலைக்கழக அனுமதி குழு 545வது குழு கூட்டம் 19,12.2019ல் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எம்சிஏ படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி 2020-2021ம் ஆண்டு முதல் எம்சிஏ படிப்பு அனைத்து பல்கலைக்கழங்களிலும் இனி இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.

MCA course change: change in the duration of MCA program from 3 years to 2 years w.e/f 2020-21

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் 2020-2021ம் ஆண்டு முதல் எம்சிஏ படிப்பில் சேர பிசிஏ அல்லது பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது பிகாம், பிஎஸ்சி, பிஏ படித்தவர்கள், பிளஸ் 2வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும்.

இளங்கலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பட்டியலில் உள்ள சமுகத்தினர் 45 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். எம்சிஏ படிப்பு 2 ஆண்டுகளாக மாற்றப்படுவது வரும் ஆண்டில் ( 2020-21ம் ஆண்டில்) இருந்தே சேருபவர்களுக்கு அமலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்சிஏ படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுளளதால் பாட திட்டமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

English summary
change in the duration of MCA program from 3 years to 2 years from 2020-21 year with introduction of new syllabus Says AICTE
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X