டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: மீடியாக்காரர்கள் சூழ்ந்து கொண்டு, கையை வைத்து தள்ளியதால், திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் கடும் கோபமடைந்த நிகழ்வு டெல்லியில் நடந்தது.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா பொதுத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நுஸ்ராத் ஜஹான் மற்றும் மிமி சக்ரபோர்தி.

இருவருமே சினிமா நடிகைகளாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். எனவே இயல்பாகவே, மீடியாக்களுக்கு இவர்கள் செயல்பாடுகள் மீது தனி கவனம் உண்டு. இந்த நிலையில், நுஸ்ராத் ஜஹான் மற்றும் மிமி சக்ரபோர்தி இருவரும், நேற்று லோக்சபாவில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல் சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்

போட்டோ போஸ்

இதையடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே, நிருபர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க கூறினர். அதேபோல, கருத்து தெரிவிக்குமாறும் வற்புறுத்தினர். ஒரு கட்டத்தில், நிருபர்களின் கூட்டத்தால் நெரிசல் அதிகமானது. நுஸ்ராத் ஜஹான் தனது கையை மிமி சக்ரபோர்தி மீது போட்டுக்கொண்டு தள்ளுமுள்ளுவிலிருந்து பாதுகாக்கும் சூழ்நிலையும் வந்தது. "சார்.. நீங்கள் இப்படி எங்களை தள்ளக்கூடாது. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்" என்று ஒரு கட்டத்தில் கத்திவிட்டார், நுஸ்ராத் ஜஹான்.

பக்கத்தில் வராதீர்கள்

பக்கத்தில் வராதீர்கள்

இதையடுத்து அங்கேயிருந்த பாதுகாப்பு படைவீரர்கள் தலையிட்டு, மீடியாக்காரர்களை தள்ளிவிட்டு, இரு எம்பிக்களையும் காரில் சென்று ஏற்றிவிட்டனர். இதையடுத்து, சற்று தூரத்தில் நின்றபடியே புகைப்படம் எடுக்க வேண்டுமே தவிர பக்கத்தில் வரக்கூடாது என இருவரும் போட்டோகிராபர்களை பார்த்து சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றனர்.

ஆச்சரிய வெற்றி

ஆச்சரிய வெற்றி

நுஸ்ராத் ஜஹான் பசிர்காட் தொகுதியிலிருந்தும் மிமி சக்ரபோர்தி, ஜாதவ்பூர் தொகுதியிலிருந்தும் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் வெற்றி மேற்கு வங்க அரசியலில் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட ஒன்றாகும்.

புதுப் பெண்

நுஸ்ராத் ஜஹானுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. துருக்கியில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பங்கேற்க, மிமி சக்ரபோர்தியும் சென்றுவிட்டார். எனவேதான், தாமதமாக நேற்று வந்து, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Newly-elected Trinamool Congress parliamentarians Nusrat Jahan and Mimi Chakraborty lost their patience outside the parliament on Tuesday after media persons mobbed them asking for quotes and pictures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X