டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு.. நிர்மலா சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க ஆஷா தொழிலாளர்கள், துணை நிலை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட கோவிட் -19 நோயை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் ரூ .50 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Recommended Video

    பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஏழைகளுக்கான பொருளாதார பேக்கேஜ் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அவர் அறிவித்தார். அதில், அவர் கூறியதாவது:

    Medical insurance of Rs 50 lakh will provided to all those fighting the COVID-19 disease

    கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க ஆஷா தொழிலாளர்கள், துணை நிலை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட கோவிட் -19 நோயை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் ரூ .50 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இதனால் 20 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு பலன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி பேக்கேஜ்! அரிசி, பருப்பு இலவசம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்புஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி பேக்கேஜ்! அரிசி, பருப்பு இலவசம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    இதன் மூலம், மருத்துவ ஊழியர்கள் தைரியமாக வைரஸ் நோயை எதிர்த்து போராடும் தைரியத்தை பெறுவார்கள் என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், கிருஷி சம்மான் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு 6 ஆயிரம் வழங்கி வருகிறது, அவசர நிலையை கருதி, முன்கூட்டியே இந்த திட்டத்தின்கீழ் ரூ.2000 டெபாசிட் செய்யப்படும். இந்த திட்டத்தின்கீழ் 8.69 கோடி விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பலனாளிகளுக்கு கூடுதலாக ரூ.2000 கிடைக்கும். இதனால், 5 கோடி குடும்பங்கள் பலனடையும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    English summary
    To address the coronavirus pandemic, Finance Minister Nirmala Sitharam has said that medical insurance of Rs 50 lakh will provided to all those fighting the COVID-19 disease.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X