டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் லாக் டவுன்.. உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு இல்லை.. அதிர்ச்சியில் தலைநகர் டெல்லி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மருந்துக் கடைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    கொரோனா பாதிப்பை அடுத்து நாடு முழுவதும் மாஸ்க் மற்றும் சானிடைஸர் ஸ்டாக் இல்லாத நிலை இருந்தது. அப்படியே இருந்தாலும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அது போல் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    கொரோனா.. வேலை இழந்த மக்கள்.. உ.பி நோக்கி சாரை சாரையாக சென்ற மக்கள்.. டெல்லியில் சோகம்!கொரோனா.. வேலை இழந்த மக்கள்.. உ.பி நோக்கி சாரை சாரையாக சென்ற மக்கள்.. டெல்லியில் சோகம்!

    முடியவில்லை

    முடியவில்லை

    இங்கு இந்த நிலைமை என்றால் தலைநகர் டெல்லியிலும் இதேதான் நீடிக்கிறது. உயிர்க் காக்கும் முக்கிய மருந்துகள் இல்லாமல் மக்கள் ஏமாற்றுடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. அத்தியாவசிய மருந்துகள் என மத்திய அரசால் பட்டியலிடப்பட்ட மருந்துகள் கிடைக்கவில்லை. இதனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அதிகாரிகள் நிறைவேற்ற முடியவில்லை.

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    விநியோகஸ்தர்களிடம் இருந்து போதுமான இருப்பு இல்லாததால் உயிர்க் காக்கும் மருந்துகள் வாங்க வருவோர் இருப்பு இல்லாததால் வெறுங்கையுடன் திரும்புகின்றனர். விநியோகிஸ்தர்களிடமே இருப்பு இல்லாத சூழல் உள்ளது. பெரிய பெரிய மருந்துக் கடைகள் உள்ள பாகிரதி பேலஸ் ஊரடங்கிலிருந்து மூடியே உள்ளது. இந்த கடைகளை வெள்ளிக்கிழமை முதல் திறப்பதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    நேரடி கொள்முதல்

    நேரடி கொள்முதல்

    போக்குவரத்து முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. மருந்துக் கடைகள் திறக்கப்பட்டதாலும் விநியோகஸ்தர்களிடம் இருந்து மருந்துகளை எப்படி கொண்டு போவது என தெரியாமல் விழிக்கிறார்கள். இதுகுறித்து சில்லறை மருந்து கடை உரிமையாளர்கள் கூறுகையில் பாகிரதி பேலஸில் உள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து மருந்துகளை நாங்கள் நேரடியாக வாங்குகிறோம்.

    அதிக விலை

    அதிக விலை

    ஆனால் அவர்களோ விலைகளை ஏற்றிவிட்டனர். மாஸ்க்கள், சானிடைசர்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இத்தனை விலை கொடுத்து வாங்கி அதை எங்களால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். மருந்துகள் இருப்பு இல்லாத சூழலால் தலைநகர் டெல்லி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

    English summary
    Medical Shops in Delhi has big problem of not having stock of life saving drugs in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X