டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட்- ஒரே மேடையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சங்கமம்... வலிமையான கூட்டணிக்கு வழிகாட்டுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக பங்கேற்றதன் மூலம் தேசிய மற்றும் மாநில அளவில் ஒரு வலிமையான கூட்டணி உருவாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம்., காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கின. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இக்கூட்டணிக்கு கிடைத்து அமோக வெற்றியை பெற முடிந்தது.

ஜார்க்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன் .. ராகுல்..மம்தா..ஸ்டாலின். கனிமொழி என கலகலத்த விழா மேடை ஜார்க்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன் .. ராகுல்..மம்தா..ஸ்டாலின். கனிமொழி என கலகலத்த விழா மேடை

எதிர்க்கட்சிகள் சங்கமம்

எதிர்க்கட்சிகள் சங்கமம்

இந்நிலையில் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், இடதுசாரி தலைவர் டி. ராஜா, ஆர்ஜேடியின் தேஜஸ்வி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களும் அணி திரண்டு பங்கேற்றனர். இதனிடையே ஜார்க்கண்ட் வெற்றி பாணியில் தேசிய அளவிலும் மாநிலங்களிலும் வலிமையான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஏன் அமைவதில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை.

தமிழகம் வலிமையான கூட்டணி

தமிழகம் வலிமையான கூட்டணி

தமிழகத்தில் திமுக தலைமையில், காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியாகவே தொடர்ந்து தேர்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. டெல்லி சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

டெல்லி தேர்தல்

டெல்லி தேர்தல்

இம்மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் பிரதான போட்டி. ராஞ்சி விழாவில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்றது. இதன் மூலம் டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி-காங்கிரஸ் உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாகுமா? அல்லது வழக்கம் போல தனித்தனியே போட்டியிடுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

மேற்கு வங்க தேர்தல்

மேற்கு வங்க தேர்தல்

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. மேற்கு வங்கத்தை கால் நூற்றாண்டுக்கும் மேல் இடதுசாரிகளே அப்படியே பாஜகவில் ஐக்கியமானதால் அக்கட்சிகளின் இருப்பே கேள்விக்குறியாகி உள்ளது. அண்மையில் இடைத்தேர்தல் முடிவுகளின் போது, இடதுசாரிகளும் காங்கிரஸும் தங்களை வலிமையானதாக காட்டிக் கொள்ள பாஜகவை வலுப்படுத்துகிறார்கள் என விமர்சித்திருந்தார் மமதா பானர்ஜி.

மாற்றம் உருவாகுமா?

மாற்றம் உருவாகுமா?

தேர்தல் அரசியல் களத்தில் மமதாவுடன் இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்தால் புதிய வரலாறாக இருக்கும்; அது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் சவாலாக இருக்கும். இந்த நிலையில் ராஞ்சி சங்கமமானது எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்துக்கும் வழிகாட்ட வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Today Hemant Soren takes oath as CM in mega Opposition leaders show of strength at Ranchi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X