டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

300 வருடங்களில் முதல் முறை.. ஷாஜகான்-மும்தாஜ் சமாதியில் நடந்த 'மட் பேக்..' வியந்துபோன மெலினா

Google Oneindia Tamil News

ஆக்ரா: டொனால்ட் ட்ரம்ப் வருகையையொட்டி, 300 வருடங்களில் முதல் முறையாக, தாஜ்மகாலில் உள்ள, ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் சமாதிகள், சுத்தம் செய்யப்பட்டன. இதற்காக பயன்படுத்தப்பட்ட Mud Pack Treatment பற்றி, மெலினா ட்ரம்ப் வியந்து விபரம் கேட்டுள்ளார்.

Recommended Video

    Why Melania Trump visit India? Here is the reasons

    17வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது தாஜ்மகால். மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, சமாதி உருவாக்கி, அதை சுற்றி தாஜ்மகால் என்ற கட்டிடத்தை எழுப்பியிருந்தார் ஷாஜகான். இது தனது கட்டிட கலைக்காக உலக அதிசயங்களில் ஒன்றாக மாறியது.

    மொத்தம் 20 வருடங்கள் இதற்கு செலவிடப்பட்டதாம். ஷாஜகான் மறைவுக்கு பிறகு, அவரது சமாதியை, மும்தாஜ் சமாதி அருகே உருவாக்கினார், அவரது மகன் அவுரங்கசீப்.

    முதல் மராமத்து

    முதல் மராமத்து

    எனவே, ஷாஜகான் மற்றும் மும்தாஜ் இருவரது சமாதிகளும், தாஜ்மகாலின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இதுவரை சமாதியில், எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. தாஜ்மகால் அவ்வப்போது சுத்தப்படுத்தப்படுமே தவிர, சமாதி பகுதிகளில் எந்த பணியும் நடக்காது. இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப், வருகையையொட்டி, 300 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, Mud Pack Treatment என்ற பராமரிப்புப் பணிகள், ஷாஜகான் மற்றும் மும்தாஜ் நினைவிடங்களில் நடந்துள்ளன. இதை மெலினா கவனிக்க தவறவில்லையாம்.

    கைடு

    கைடு

    நேற்று, ட்ரம்ப்புடன் அவர் மனைவி மெலினாவும், தாஜ்மகால் சென்று சுற்றிப் பார்த்து வியந்தார். அப்போது, அவர்களுக்கு, ஒரு கைடு நியமிக்கப்பட்டார். அவர் பெயர், நிதின் குமார். ஆக்ராவை சேர்ந்தவர். அவர் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், தாஜ்மஹாலின் வரலாற்றையும், கட்டுமானத்தையும், அதன் பின்னணியில் உள்ள கதையையும் அவர்களிடம் சொன்னேன். ஷாஜகான் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் ஆகியோரின் வரலாறு மற்றும் காதல் பற்றி அறிந்ததும், டிரம்ப் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

    அவுரங்கசீப்

    அவுரங்கசீப்

    ஷாஜகான் அவரின், சொந்த மகன் அவுரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அவரது மரணத்திற்குப் பிறகு மும்தாஜின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டார், என்பதையும், தெரிவித்தேன். தாஜ்மகால் குவிமாடத்தின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு விவரங்கள் குறித்து அவர்களிடம் கூறியபோது, இருவரும் ஆர்வமாக கேட்டனர்.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    மெலனியா டிரம்ப், களிமண் பராமரிப்பு பற்றி கேட்டார். மேலும் இந்த செயல்முறையின் விவரங்களை அறிந்ததும் ஆச்சரியப்பட்டார். இவ்வாறு, நிதின் குமார் தெரிவித்தார். தாஜ்மஹால் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்திய கலாச்சாரத்தின் செழுமை மற்றும் வேற்றுமை அழகுக்கு காலம் கடந்த சான்று. நன்றி, இந்தியா. இவ்வாறு ட்ரம்ப் மற்றும் அவர் மனைவி இருவரும், கூட்டாக விசிட்டர் புத்தகத்தில் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The architectural grandeur of 17th century Taj Mahal and the story of its construction by Mughal Emperor Shah Jahan left US President Donald Trump "impressed" during his visit to Agra, the guide who accompanied him said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X