• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு

|

டெல்லி: நமது தேசத்தைப் பாருங்கள் என்ற இணையக் கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலா அமைச்சகம் விடுதலைப் போராட்ட இயக்கம் தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு ஐந்து கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சுதந்திரத் திருநாளில் கொரோனாவில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்வோம்: மோடி

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:

கடந்த 8.8.2020 அன்று , '1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்' என்ற இணைய நிகழ்ச்சியை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது. சுதந்திர தினத் தொடரில் இது முதலாவதாகும். நமது தேசத்தைப் பாருங்கள் தொடரில் இது 45-வது அத்தியாயமாகும்.

Memoris of 1857- A Prelude to Independence

நமது தேசத்தைப் பாருங்கள் தொடர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் கீழ், இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையைப் பறைசாற்றுவதன் முயற்சியாகும். இது, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற எழுச்சியை மெய்நிகர் தளத்தில் தொடர்ந்து அளித்து வருகிறது.

பரிதாபகரமான சமூகப் பொருளாதார நிலை, நிலப் பிரச்சினைகள், வருவாய் நிர்வாகம், பொருளாதாரச் சீரழிவு, நிர்வாகத்தில் இந்தியர்களின் கீழ் நிலை, குளறுபடியான கோட்பாடு, பகதூர் ஷா ஜபார் அவமதிப்பு, பாரபட்சமான காவல்துறை, நீதித்துறை, இந்திய சிப்பாய்களிடம் வேறுபாடு ஆகியவற்றால் கிளர்ச்சி வெடித்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டன.

ரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா? ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா

1857-ஆம் ஆண்டு முதல் சுதந்திரப்போரில் பங்கு கொண்டு, தில்லியின் எல்லைகளை அடைத்து பிரிட்டிஷ் படைகள் முன்னேறாத வண்ணம் தடுத்து, தில்லியை 120 நாட்கள் சுதந்திரமாக வைத்திருந்த பரீதாபாத்தின் பல்லப்கர் மன்னர் ராஜா நாகர் சிங் போன்ற அதிகமாக வெளியில் பிரபலமடையாதவர்கள் மற்றும் உண்மைச் சம்பவங்களைப் பட விளக்கம் அளித்தவர்கள் வழங்கினர். வேறு சண்டைகளும் இதில் காட்டப்பட்டன.

முதல் சுதந்திரப்போரில் தொடர்புடைய பல்வேறு இடங்கள் பட்டியலிடப்பட்டன. 1857 போர் பற்றிய தகவல்கள் கொண்ட படம் புதிய அனுபவமாக இருந்தது.

நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடர் , மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய இ-நிர்வாக துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் அமர்வுகள் தற்போது https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற தளத்தில் கிடைக்கும். இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கையாளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் இதைக் காணலாம்.

இந்தத் தொடரின் அடுத்த அத்தியாயம் ஆகஸ்ட் 12-ஆம்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இதன் தலைப்பு , பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அதிகம் தெரியாத கதைகள் என்பதாகும். தொடருக்கான பதிவுகளை https://bit.ly/LesserKnownDAD-இல் செய்யலாம்.

இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
India’s struggle to freedom is a significant chapter in the nation’s history and holds a value greater than any significant event of the past. The Ministry of Tourism as part of its ‘Dekho Apna Desh’ webinar series to commemorate and honour nation’s most significant day has lined up a series of five webinars that collectively touch upon themes encompassing the freedom movement, places significant to it and pioneers who had a notable participation in helping India secure its independence.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X