டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?

மேனகா காந்திக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Menaka Gandhi: மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லை.. இதான் காரணமா?- வீடியோ

    டெல்லி: நம்ம ஊர்ல எப்படி எச்.ராஜாவோ அதுமாதிரி மேனகா காந்தியை இந்துத்துவா பிடிப்புக்கு உதாரணமாக சொல்லலாம்! ஆனால் என்னமோ தெரியல அவருக்கு எந்த பதவியும் தரக்காணோம்.

    சஞ்சய்காந்தியின் மறைவுக்கு பின் இந்திரா காந்தி குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் எழுந்தன. அதிகரித்த கருத்து வேறுபாடுகளால் சஞ்சய் மனைவியான மேனகா காந்தி பாஜகவில் சேர்ந்தார். விபிசிங், வாஜ்பாய் அமைச்சரவையிலும் மத்திய அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். சென்ற முறை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரானார்.

    உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் அக்கட்சி சார்பிலும் போட்டியிட்டார். இவரது தேர்தல் பிரச்சாரங்கள்தான் ரொம்பவும் டென்ஷனை ஏற்படுத்தியது. குறிப்பாக, சுல்தான்பூரில் பிரசாரத்தில் பேசியபோது சொன்னதாவது:

    புதிய அமைச்சரவையில் அசத்தும் 6 பெண் அமைச்சர்கள்.. மோடியின் அமைச்சரவையில் பெண்களுக்கு 10% இடம்!புதிய அமைச்சரவையில் அசத்தும் 6 பெண் அமைச்சர்கள்.. மோடியின் அமைச்சரவையில் பெண்களுக்கு 10% இடம்!

    டீல் பேசிய மேனகா

    டீல் பேசிய மேனகா

    "முஸ்லிம் ஒருவர் என்னிடம் காரியம் ஆகவேண்டும் என்று வந்தால், நான் எப்படி அவருக்கு உதவ முடியும்? எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கல்தான். அப்படி எதிர்பார்க்காம இருப்பதற்கு நாம ஒன்னும் மகாத்மா காந்தி வாரிசு கிடையாது. முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கோரிக்கைகளை நான் புறக்கணிக்க வேண்டியிருக்கும்" என்று டீல் பேசுவது போல ஓட்டு கேட்டார்.

    வெற்றி

    வெற்றி

    இப்படி, சாதி, மதரீதியாக, வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த, உபி முதல்வர் யோகி ஆகட்டும், முஸ்லீம்களை மிரட்டி வாக்கு கேட்ட மேனகா காந்தியாகட்டும், இதுவரை இவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை. தற்போது மேனகா வெற்றி பெற்றுவிட்டார்.

    சபாநாயகர்?

    சபாநாயகர்?

    அதனால் இந்த முறையும் எப்படியும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேனகாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதேசமயம், சீனியரான மேனகா காந்தியை அவ்வளவு சீக்கிரம் பாஜக விட்டுவிடாது. எனவே அவரை சபாநாயகராக நியமிக்கலாம் என தெரிகிறது.

    நிறைய வாய்ப்பு

    நிறைய வாய்ப்பு

    ஏனென்றால், நீண்ட காலம் அனுபவம் உள்ளவர்களைதான் சபாநாயகராக நியமிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் 8 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ள மேனகா, சபாநாயகராக நியமிக்கப்பட நிறைய வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது. அதனால்தான் நேற்று அமைச்சர் பதவி எதுவும் இவருக்கு தரப்படவில்லையாம்.

    3-வது பெண் சபாநாயகர்

    3-வது பெண் சபாநாயகர்

    ஏற்கனவே மீராகுமார், சுமித்ரா மகாஜன் என்று சபாநாயகராக பெண்கள் அவையை அலங்கரித்துள்ளனர். இந்த முறை மேனகாவை நியமித்தால், 3-வது பெண் சபாநாயகர் என்ற பெருமை, பதவி, அங்கீகாரம் மேனகாவுக்கு போய் சேரும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

    English summary
    Menaka Gandhi has not been nominated in the Union Cabinet. So it seems that the Speaker will be promoted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X