டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு ராணுவம் முக்கியமா? தேர்தல் முக்கியமா? இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் டிரெண்ட்!

பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு எதிராக நேற்று டிவிட்டரில் மிகப்பெரிய விவாதம் நடைபெற்று இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    #MeraJawanSabseMajboot | இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் டிரெண்ட்!- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு எதிராக நேற்று டிவிட்டரில் மிகப்பெரிய விவாதம் நடைபெற்று இருக்கிறது. காஷ்மீர் பிரச்சனை நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடி, ராணுவ வீரர்களை கவனிக்காமல் தேர்தல் பிரச்சாரம் செய்வதை கண்டித்து #MeraJawanSabseMajboot என்ற டேக் வைரலாக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் நடக்கும் இரண்டு சம்பவங்கள்.. ஒன்று நாட்டு மக்களுக்கு பெரிதாக பயன் இல்லாத ஒன்று. இன்னொன்று நாட்டின் தலையாய பிரச்சனை. இதில் பிரதமர் மோடி எதில் கவனம் செலுத்தினார் என்பதுதான் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது.

    நேற்று விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருந்த பிரச்சனை மிகவும் வைரலாக இருந்த நேரத்தில் பிரதமர் மோடி வேறு விஷயத்தில் அதிகம் பிசியாக இருந்தார். தேர்தல் தொடர்பான பணிகளில் மிக தீவிரம் காட்டினார்.

    [Read more: திரும்ப திரும்ப பேசுற நீ... மீண்டும் வைரலாகும் கோ பேக் மோடி.. தேசிய அளவில் நம்பர் 1!]

    மோடி ஆலோசனை

    காஷ்மீர் பிரச்சனைக்கு இடையில் பிரதமர் மோடி நேற்று காஷ்மீரில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் வீடியோ கான்பிரன்சில் கலந்து கொண்டு பேசினார். இது முழுக்க முழுக்க தேர்தல் ஆலோசனை ஆகும். ''என்னுடைய வாக்குசாவடியே பலமான வாக்குசாவடி'' என்ற தலைப்பில் காஷ்மீரில் வாக்குச்சாவடி வாரியாக பாஜகவை பலபடுத்துவது எப்படி என்று இதில் பாஜகவினர் உடன் மோடி ஆலோசித்தார்.

    பெரிய சர்ச்சை

    இந்த நிகழ்விற்கு இந்தியில் ''மேரே பூத் சப்ஸே பூத்'' (#MeraBoothSabseMazboot) என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியிலும் பாஜகவினர் இதை டிரெண்ட் செய்து வந்தனர். பாஜகவின் தேர்தல் பிரச்சார கருத்துக்களை காஷ்மீர் பிரச்சனைக்கு இடையிலும் இவர்கள் டிவிட்டாக செய்து வந்து, #MeraBoothSabseMazboot டேக்கை வைரலாக்கிக் கொண்டு இருந்தனர்.

    பதிலடி கொடுத்தனர்

    இதை அடுத்து மக்கள் பலர் பாஜகவினரின் இந்த செயல்பாட்டிற்கு எதிராக டிவிட்டரில் களமிறங்கினார். #MeraBoothSabseMazboot டேக்கிற்கு போட்டியாக ''என்னுடைய ராணுவ வீரரே பலமான வீரர்'' என்று பொருள்படும் வகையில் #MeraJawanSabseMajboot டேக்கை வைரலாக்க தொடங்கினார்கள். இதில் பாஜகவிற்கு எதிராக நிறைய கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தது.

    வென்றது

    #MeraJawanSabseMajboot தொடர்ந்து ஆயிரக்கணக்கில் டிவிட்கள் போடப்பட்டது. இதையடுத்து #MeraJawanSabseMajboot தேசிய அளவில் நேற்று முதலிடம் பிடித்தது. முக்கியமான பாதுகாப்பு பிரச்சனை நடக்கும் நேரத்தில் பாஜக தேர்தலில் கவனம் செலுத்துவது ஏன், மோடி பிரச்சாரம் செய்வது ஏன் என்று இதில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    What is Important for PM Modi: #MeraJawanSabseMajboot Vs #MeraBoothSabseMazboot a Twitter war against BJP's campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X