டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Metoo பாலியல் புகார் எதிரொலி.. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா!

மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அமைச்சர் மீது 10 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்- வீடியோ

    டெல்லி: மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்துள்ளார்.

    பாஜகவை சேர்ந்த இணையமைச்சர் எம்.ஜே அக்பர் மீது 20 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்து இருக்கிறார்கள். இது பாஜக கட்சிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது.

    MeToo Allegations: Minister MJ Akbar resigns from his post of Minister of State External Affairs

    இந்தியாவில் தற்போது ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்தார்.

    இதை தொடர்ந்து 20 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதனால் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் பதவி விலகுவார் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்துள்ளார். வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தார் எம்.ஜே அக்பர்.

    இவர் பிரதமர் மோடியிடம் தனது ராஜினமா கடிதத்தை அளித்துள்ளார். ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.

    English summary
    MJ Akbar resigns from his post of Minister of State External Affairs MEA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X