டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது சர்ச்சை.. கொல்கத்தா கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

கொல்கத்தா கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தா கமிஷனர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி- வீடியோ

    டெல்லி: கொல்கத்தா கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கொல்கத்தா கமிஷனரை எதிர்த்து சிபிஐ தொடுத்த வழக்கில் இன்று காலைதான் தீர்ப்பு வந்தது. சாரதா நிதி நிறுவன மோசடி விசாரணையில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ வழக்கு தொடுத்து இருந்தது.

    CBI vs Mamata Banerjee: MHA asked the WB govt to initiate disciplinary proceedings against Kolkata commissioner

    இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு கமிஷனர் ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் அவரை சிபிஐ கைது செய்ய கூடாது, அவரிடம் வாக்குமூலம் வாங்க கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்த நிலையில் புதிய திருப்பமாக தற்போது கொல்கத்தா கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் குமார் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் ராஜீவ் குமார் மாநில அரசின் கீழ் வருவதால் அவர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் மேற்கு வங்க மாநில அரசை ராஜீவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கையை குறித்த விவரங்களையும் வெளியிட கூறி இருக்கிறது.

    விதி எண் 1968/AIS-Rule No 3,5 & 7 கீழ் ராஜீவ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வர் நடத்திய போராட்டத்தில் கமிஷனர் கலந்து கொண்டது ஆட்சி பணிகளின் விதியின்படி தவறு. முதல்வருடன் , அரசியல் கட்சியினருடன் ஒரே மேடையில் அதிகாரி இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    CBI vs Mamata Banerjee: MHA asked the WB govt to initiate disciplinary actions against Kolkata commissioner Rajeev Kumar for sitting on dharna with political parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X