டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் நீட்டிப்பு பற்றி பிரதமர் மோடி அறிவிக்க மாட்டார்.. உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: 'மன் கி பாத்' ரேடியோ உரையின்போது, ஐந்தாவது கட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிடுவார் என்று வெளியான செய்தி தவறானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளரின், ட்விட்டர் பக்கத்தில், இந்தியா டுடே என்ற ஆங்கில ஊடகத்தில் வெப்சைட் செய்தி ஒன்று ஷேர் செய்யப்பட்டு உள்ளது.

அதில், "வரும் ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, ஐந்தாவது கட்ட ஊரடங்கு பற்றி அறிவிப்பார்" என்று தலைப்பிடப்பட்டு இருந்தது.

அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் இந்தியா.. பாக். பிரதமர் இம்ரான் கானின் அகங்கார பேச்சுஅண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் இந்தியா.. பாக். பிரதமர் இம்ரான் கானின் அகங்கார பேச்சு

நிருபரின் யூகம்

நிருபரின் யூகம்

மேலும் அதில், உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த செய்தியில் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாக குறிப்பிட்டு தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த அனைத்து தகவல்களும், நிருபரின் யூகத்தின் அடிப்படையில் ஆனவை. உள்துறை அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்ததாக இதில் குறிப்பிடப்பட்டிருப்பது சரியான தகவல் கிடையாது, மற்றும் பொறுப்பற்ற தனமானது என்று தெரிவித்துள்ளார்.

மோடி உரையில்லை

மோடி உரையில்லை

இதன் மூலம், ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போது, பிரதமர் மோடி டிவியில் தோன்றி அறிவித்தார். பின்னர் அரசு அறிக்கைகள் வாயிலாகத்தான் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன என்பது, குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

அதேநேரம், ஊரடங்கு உத்ததரவை மே 31ம் தேதிக்கு பிறகும், நீட்டிக்க நிபுணர்கள் பலரும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். மே 31ம் தேதிக்கு பிறகான ஊரடங்கின்போது, மால்கள், சினிமா, தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வம்

அதிகாரப்பூர்வம்

உள்துறை அமைச்சகம் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை வெளியில் வரக்கூடாது என நினைப்பதாக கூறப்படுகிறது. எனவே அவசரமாக, ஊடக செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளது என்று தெரிகிறது.

English summary
The quoted story claims to have inside details about Lockdown5, from MHA Sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X