டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை உள்ளதா? விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவில் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் அமேதியில் போட்டியிடுகிறார்.

இந்த இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்புமனு மிக மிக தாமதமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராகுல் இரட்டை குடியுரிமை வைத்து இருக்கிறார் என்று அமேதியில் சுயேச்சை வேட்பாளர் துருவ் லால் என்பவர் புகார் அளித்து இருந்தார்.

மர்மம் விலகியது.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி சாகவில்லை.. 'போர்' தொடரும் என வீடியோவில் அறிவிப்புமர்மம் விலகியது.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி சாகவில்லை.. 'போர்' தொடரும் என வீடியோவில் அறிவிப்பு

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தேர்தல் ஆணையம் இந்த புகாரை நிராகரித்துவிட்டது. துருவ் லாலின் புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என்று புகாரை தள்ளுபடி செய்தது. அதேபோல் ராகுல் காந்தியின் வேட்புமனுவும் இரண்டு தொகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்போது என்ன பிரச்சனை

இப்போது என்ன பிரச்சனை

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 2015ல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று சுப்பிரமணியன் சாமி தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆதாரம் என்ன

ஆதாரம் என்ன

சுப்பிரமணியன் சாமியின் புகாரில், பிரிட்டனில் உள்ள பேக்ஆப்ஸ் என்று நிறுவனத்தில் ராகுல் காந்தி முக்கிய பொறுப்பில் உள்ளார். அதில் ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவரின் பிறந்த ஊர் பிரிட்டன் என்றும் உள்ளது என்று சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடுத்து இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த ஆதாரம் சரியானது கிடையாது என்று 2015லேயே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது அதே ஆதாரத்தை வைத்து மீண்டும் உள்துறை அமைச்சகம் ராகுலிடம் விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்ப பாஜக இப்படி செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருக்கிறது.

English summary
MHA issues fresh notice to Congress chief Rahul Gandhi over dual citizenship row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X