டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலுக்காக வேண்டுமென்றே ராகுல் மீது குடியுரிமை சர்ச்சையா? உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு

Google Oneindia Tamil News

புதுடெல்லி: குடியுரிமை குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநிலங்களவை எம்பியும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, அனுப்பி உள்ள கடிதத்தில் பிரிட்டனில் 2003ம் ஆண்டு பேக்காப்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தார்.

மேலும் 2005 மற்றும் 2006 அக்டோர் 31ம் தேதி அந்நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தனது பிறந்த நாளை 1970, ஜுன் 19 என குறிப்பிட்டு இருந்தார். மேலும் ராகுல் காந்தி தான் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் அப்போது குறிப்பிட்டு இருந்தார். அந்த நிறுவனம் இங்கிலாந்தின் ஹேம்ஸ்பயரில் செயல்படுகிறது. எனவே ராகுலின் குடியுரிமை குறித்து விசாரிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கோரியிருந்தார்.

போட்டோ எடுத்தது குற்றமா? தினகரனுடன் 'முதல்வர்' கூடதான் போட்டோ எடுத்தாரு? எம்எல்ஏ பிரபு கேள்வி போட்டோ எடுத்தது குற்றமா? தினகரனுடன் 'முதல்வர்' கூடதான் போட்டோ எடுத்தாரு? எம்எல்ஏ பிரபு கேள்வி

சுயேட்சை வேட்பாளர்

சுயேட்சை வேட்பாளர்

இதேபோல் அமேதி தொகுதில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் ராகுல் காந்தி என்று கூறி அவரது வேட்புமனுவை பரிசீலிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் சுயேட்சையின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் ராகுலின் வேட்பு மனுவை ஏற்றது.

உள்துறை நோட்டீஸ்

உள்துறை நோட்டீஸ்

இதனிடையே மாநிலங்களவை எம்பியான சுப்பிரமணியன் சுவாமியின் கடிததத்தை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு விளக்கம்

தேர்தல் நேரத்தில் இப்படி வேண்டுமென்றே பிரிட்டன் குடியுரிமை சர்ச்சை ராகுல் மீது எழுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "நாடாளுமன்ற எம்பிக்கள் யார் கேள்வி எழுப்பினாலும் விளக்கம் அளிப்பது மத்திய அமைச்சகங்களின் கடமை. அதன்படியே சுப்பிரமணியன் சுவாமி எம்பி பலமுறை ராகுல் குடியுரிமை தொடர்பாக கேள்வி கேட்டார்.

உள்துறை விளக்கம்

உள்துறை விளக்கம்

அதன்அடிப்படையில் விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய விஷயம் இல்லை. சாதாரண நடவடிக்கை தான். ஏற்கனவே பாதி மக்களவை தேர்தல் முடிந்துவிட்டதால், இதை தேர்தலுக்காக செய்யப்பட்டதாகவும் கூறமுடியாது" இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்..

English summary
MHA notice to Rahul Over British Citizenship, "It is not a big development. It is a normal process," says Rajnath Singh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X