டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு ரூ.11,092 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: தனிமைப்படுத்தல் வசதிகளை அமைப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிற வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்தின் (எஸ்.டி.ஆர்.எம்.எஃப்) கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் ரூ .11,092 கோடியை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

Recommended Video

    மோடி ஏப்ரல் 9 தேர்வு செய்தது ஏன்?

    எஸ்.டி.ஆர்.எம்.எஃப் இன் கீழ் ரூ .11,092 கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் வெளியிட உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் இன்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MHA releases Rs 11,092 crore to fight coronavirus

    2020-21 ஆம் ஆண்டிற்கான, மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்தின், முதல் தவணை பங்கான 11,092 கோடி ரூபாய் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்தப்படுதல் வசதிகள், மாதிரி சேகரிப்பு மற்றும் ஸ்க்ரீனிங் ஆகியவற்றை செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

    சென்னையில், ஒரே நாளில் 2 மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. தமிழகத்திலேயே முதலிடம்
    கூடுதல் சோதனை ஆய்வகங்களை அமைத்தல், நுகர்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தல், சுகாதாரத் துறை, நகராட்சி, காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகளுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது, அரசு மருத்துவமனைகளுக்கான தெர்மல் ஸ்கேனர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் நுகர்பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சகம் மொத்தம் ரூ .17,287 கோடியை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில்தான், ரூ .11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா, அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய 14 மாநிலங்களுக்கு ரூ .6,195 கோடி 'வருவாய் பற்றாக்குறை நிதி மானியமாக' ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் தமிழகத்திற்கு, 51,000 கோடி கிடைக்கிறது.

    English summary
    The Finance Ministry on Friday released Rs 17,287 crore to states to enhance their financial resources during the COVID-19 crisis. Of this amount, Rs 11,092 crore is towards State Disaster Response Mitigation Fund (SDRMF) to all states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X