டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்!

Google Oneindia Tamil News

டெல்லி: அக்டோபர்அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ இந்திய, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு 25-ஆம் தேதி முதல் 30 வரை பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் புது தில்லியில் அமைச்சர் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பெர் மற்றும் இந்திய அதிகாரிகள் வழிநடத்தும் மூன்றாவது வருடாந்திர அமெரிக்க இந்திய 2+2 மந்திரிகளுக்கு இடையே ஆன உரையாடலில் பங்கேற்பார்.

Michael Pampeo travel to India, Srilanka, Maldives and Indonesia from Oct 25 to 30

அதில் விரிவான உலகளாவிய வியூக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு, மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் உலகிலும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஊக்குவிக்க விரிவான ஒத்துழைப்பு ஆகியவை இடம்பெறும்.

ஒரு வலுவான, இறையாண்மை கொண்ட இலங்கையுடனான கூட்டுறவுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டவும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான இலக்குகளை முன்னெடுக்கவும் அமைச்சர் பாம்பியோ கொழும்புக்கு பயணிப்பார்.

ஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்ஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்

அதன் பின்னர் தனது மாலே பயணத்தின் போது அமைச்சர் பாம்பியோ நெருங்கிய இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு முதல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் வரையிலான பிரச்சினைகளில் கூட்டு முயற்சிகளை முன்னேற்றவும் கலந்தாலோசிப்பர்.

ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பற்றிய இரு நாடுகளின் பார்வையை உறுதிப்படுத்த பொதுச் கருத்துக்களை வழங்கவும், இந்தோனேசிய அதிகாரிகளை சந்திக்கவும் அமைச்சர் பாம்பியோ ஜகார்த்தாவுக்குச் செல்வார் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
US Secretary of State Michael Pampeo travel to India, Srilanka, Maldives and Indonesia from Oct 25 to 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X