டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய பொருளாதாரம் குறித்து உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் சொன்ன வார்த்தைகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    India has the potential for 'very rapid' economic growth - Bill Gates

    டெல்லி: மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவுக்கு உள்ளதாக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தன்னிடம் உள்ள பெரும் பணத்தை தற்போது தானம், தர்மம் போன்ற காரியங்களுக்கு செலவழித்து வருகிறார்.

    இதற்காக அவர் பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை உலகம் முழுதும் மக்களை வறுமையில் இருந்து மீட்க கல்வி மற்றும் சுகாதார உதவிகளை செய்து வருகிறது.

    மீண்டும் புத்துயிர் பெறும் அம்மா குடிநீர்... தமிழக அரசு நிதி ஒதுக்கீடுமீண்டும் புத்துயிர் பெறும் அம்மா குடிநீர்... தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

    இந்தியாவில் பில்கேட்ஸ்

    இந்தியாவில் பில்கேட்ஸ்

    இதற்காக பில்கேட்ஸ் பல கோடிக்களை தனது அறக்கட்டளைக்கு தானமாக ஆண்டு தோறும் அளித்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் பில்கேட்சின் அறக்கட்டளை மேற்கொண்டுவரும் நற்பணிகளை பார்ப்பதற்காக அவர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    விரைவான வளர்ச்சி

    விரைவான வளர்ச்சி

    டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பில்கேட்ஸ் அளித்த பேட்டியில் , இந்திய பொருளாதாரம் குறித்து பேசும் போது மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.

    வறுமை இருக்காது

    வறுமை இருக்காது

    இப்போது உள்ள காலத்தைப் பற்றி பேச எனக்கு ஞானம்இல்லை, ஆனால் அடுத்த 10 வருடங்களில், மிக விரைவான வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இந்தியாவுக்கு உள்ளது. இதன் காரணமாக மக்கள் வறுமையிலிருந்து மீள்வார்கள். சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து முதலீடு செய்ய அரசுக்கு அற்புதமான வழி பிறக்கும் என்றார்.

    நல்ல வளர்ச்சி

    நல்ல வளர்ச்சி

    இந்திய பொருளாதார வளர்ச்சி சரிந்து வரும் நிலையில் அது பற்றி பில்கேட்ஸ் கூறுகையில், இந்தியாவுக்கு நல்ல வளர்ச்சி இருப்பதாக எல்லோரும் நம்புகிறார்கள், ஏனெனில் இந்தியா அதிக வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான சாத்தியங்கள் நிச்சயமாக உள்ளன என்றார்.

    உதாரணம்

    உதாரணம்

    இந்தியாவின் ஆதார் சேவை திட்டங்களை வெகுவாக பாராட்டிய பில்கேட்ஸ், இந்தியாவின் ஆதார் தொழில்நுட்பம் என்பது நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு மற்ற நாடுகளுக்கு உதாரணமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

    மருந்து தயாரிப்பு

    மருந்து தயாரிப்பு

    இது தவிர இந்தியாவின் நிதிசேவைகள் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளின் செயல்பாடுகளையும் பில்கேட்ஸ் வெகுவாக பாராட்டினார். பாரத் பயோடெக், பயோ-இ போன்ற 12க்கும் மேற்பட்ட இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்தி பணிகள், மனிதர்களை மேம்படுத்துவதற்கான மகத்தான பணிகள் என்று பாராட்டினார்.

    English summary
    Microsoft co-founder Bill Gates said that India has the potential for "very rapid" economic growth over the next decade,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X