டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

    டெல்லி: இந்தியாவுக்கு 3 நாட்கள் பயணமாக வருகை தந்துள்ள மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

    மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் உலக பணக்காரர்களில் முன்னிலை வகித்து வருகிறார். இவர் சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்.

    Microsoft Co Founder meet PM Narendra Modi in Delhi

    அதற்காக அவர் பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் உலக முழுவதும் உள்ள மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த உதவிகளை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது.

    இந்த அறக்கட்டளையின் பெயரில் பல கோடி பணத்தை அவர் டெபாசிட் செய்துள்ளார். இந்த நிலையில் இந்தியாவில் இவரது அறக்கட்டளை மேற்கொண்டு வரும் நற்பணிகளை பார்வையிடுவதற்காக அவர் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    அவர் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பில்கேட்ஸ் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவுக்கு உள்ளதாக கூறினார்.

    English summary
    Microsoft Co Founder meet PM Narendra Modi in Delhi. He is in India to look after his foundation's welfare projects.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X