டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெஷினில் கோளாறு.. அதுவா தொழிலாளர் மீது ஸ்பிரே ஆய்ருச்சு.. கிருமிநாசினி.. டெல்லி அரசு விளக்கம்

டெல்லி தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: "ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது.. அந்த கிருமிநாசினி மருந்து கலக்கி வைத்துள்ள ஜெட் மிஷினில் திடீரென கோளாறு ஏற்பட்டுவிட்டது.. அந்த மிஷினில் அதிக பிரஷர் வந்துவிடவும்தான், அந்த மருந்து அங்கிருந்த தொழிலாளர்கள் மீது பட்டுவிட்டது.. வேண்டுமென்றே செய்யவில்லை" என்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்த சர்ச்சை விவகாரத்துக்கு தெற்கு டெல்லி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

எத்தனை லாக்டவுன் போட்டாலும், எத்தனை தளர்வுகளை அறிவித்தாலும் நாளுக்கு நாள் புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனைக்கு மட்டும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை.. இவர்களின் கண்ணீர் துடைத்தெறியப்படவில்லை.. இவர்களின் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரப்படவில்லை.

பிழைப்பு தேடி வந்த இடத்தில் வேலையும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் கஷ்டப்படுவதைவிட, நடந்தாவது ஊர் போய் சேரலாம் என குடும்பம் குடும்பமாக கிளம்பி செல்லும்போதுதான், ஏராளமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

4 நாட்களாக மிக மோசம்.. 10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா!4 நாட்களாக மிக மோசம்.. 10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா!

பிஞ்சுகள்

பிஞ்சுகள்

எத்தனையோ பேர் வழியில் மயங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள்.. சிலர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.. தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கியபடி தளர்ந்து செல்கிறார்கள். பிஞ்சுகள் காலில் செருப்பு கூட இல்லாமல் வெயிலில் நடந்து போகின்றன.

நலன்

நலன்

உயிரை கையில் பிடித்து கொண்டு ஊர் போய் சேர்வது என்பதே மலைப்பான விஷயமாகிவிட்டது. இதனால் இந்த தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும், மனிதநேயத்துடன் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன.. இந்த நிலையில் இன்னொரு கொடுமை டெல்லியில் நடந்துள்ளது..

பரேலி

பரேலி

ஏற்கெனவே இப்படித்தான் கடந்த மார்ச் மாதமும் பரேலி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பி வந்தபோது, ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே அவர்களை அதிகாரிகள் உட்கார வைத்து கெமிக்கல் ஸ்பிரே தெளித்துவிட்டனர்.. அந்த வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இப்போதும் அதேபோல மனிதர்கள் என்றுகூட மருந்ததை முகத்திலேயே பீய்ச்சி அடித்துள்ளனர்.

பரேலி

பரேலி

ஏற்கெனவே இப்படித்தான் கடந்த மார்ச் மாதமும் பரேலி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பி வந்தபோது, ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே அவர்களை அதிகாரிகள் உட்கார வைத்து கெமிக்கல் ஸ்பிரே தெளித்துவிட்டனர்.. அந்த வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இப்போதும் அதேபோல மனிதர்கள் என்றுகூட மருந்ததை முகத்திலேயே பீய்ச்சி அடித்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதை ஒருவர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடவும் இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.. ஒருவர் மருந்தை தெளித்தால், மற்றவர்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டு நிற்பதும் அந்த வீடியோவில் பதிவானது.. விஷயம் வெளியே வந்து விவகாரமாகவும் வெடித்துவிட்டது.

கிருமிநாசினி

கிருமிநாசினி

இதையடுத்து, இதற்கு டெல்லி மாநகராட்சி விளக்கம் தந்து ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.. அதில்,"ஏதோ தெரியாமல் இந்த சம்பவம் நடந்துவிட்டது... அந்த கிருமி நாசினி மருந்து கலக்கி வைத்துள்ள ஜெட் மிஷினில் திடீரென கோளாறு ஏற்பட்டுவிட்டது.. கிருமிநாசினி தெளிக்கும்போது அந்த மிஷினில் அதிக பிரஷர் வந்துவிட்டது.

மன்னிப்பு

மன்னிப்பு

அதனால்தான் அழுத்தம் தாங்காமல் குழாய் வழியாக திடீரென மருந்து வெளியே வந்துவிட்டது. வேண்டுமென்றே செய்யவில்லை.. இனிமேல் இப்பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு அந்த ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது... அதற்காக தொழிலாளர்களிடம் டெல்லி மாநகராட்சி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
migrant workers: civic workers sprayed sanitizer on migrant workers in delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X