டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர்.. ஒரே திட்டத்தில்.. அசரடித்த மத்திய அரசு.. புலம்பெயர் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: சூப்பர் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் ஒன்றினை தயார் செய்துள்ளது.. அதன்படி 8 கோடி தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்க்கப்படும் என நம்பப்படுகிறது.

லாக்டவுன் முதல்முறையாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிக அளவு பாதிக்கப்பட்டு வருவது புலம்பெயர் தொழிலாள்ரகள்தான்.. அன்று முதல் இப்போது வரை இவர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பலர் சுருண்டு மாண்டு வருகின்றனர்.. இவர்களுக்காக ஸ்பெஷல் ரயில்கள் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தாலும், துர்திர்ஷ்டமாக ரயிலிலேயே உயிரிழக்கும் நிலைமையும், விபத்துகளில் உயிரிழக்கும் நிலைமையும் நேர்ந்து வருகிறது.

13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி

 கவலை

கவலை

இவர்களின் பிரச்சனைகளைதான் எதிர்க்கட்சிகள் இன்றுவரை விமர்சித்து வருகின்றனர்.. சோனியா காந்தி இவர்களை பற்றி அதிகமாக தன் கவலையை வெளிப்படுத்தினார்.. இதனிடையேதான் சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தொழிலாளர்களின் வயிற்றில் பாலை வார்ப்பது போல ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

 ஊரக வளர்ச்சித்துறை

ஊரக வளர்ச்சித்துறை

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வழங்க நடவடிக்கை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தொழிலாளர்களை கண்டறிந்து பதிவு செய்யும் பணிகள் துவக்கம், தொழிலார்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய தேசிய அளவில் ஒரு அமைப்பு, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.10,000 கோடி உட்பட அவர்களுக்கான 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு உணவு பொருட்கள் உட்பட சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.

 வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

இப்போது இன்னொரு அறிவிப்பினையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. அது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான அறிவிப்பு... இவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டாலும், அவர்களது வாழ்வாதாரம் என்னவாகும் என்பதை புரிந்து கொண்டு மத்திய அரசு இந்த மெகா திட்டத்தை உருவாக்கி உள்ளது.

 பீகார் - உபி

பீகார் - உபி

நம் நாட்டிலுள்ள 116 மாவட்டங்களை மையமாக கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே நிரந்தர திட்டத்தை உருவாக்கும் பணியைதான் மத்திய அரசு தொடங்கியுள்ளது... அது இவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சிறப்பு திட்டம் தான்.. தேர்ந்தெடுத்த 116 மாவட்டங்களில் பீகாரின் 32 மாவட்டங்களும், உத்திரபிரதேசத்தின் 31 மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தின் 24 மாவட்டங்கள், ராஜஸ்தானின் 22 மாவட்டங்கள், ஜார்க்கண்டின் 3 மாவட்டங்கள், ஒடிசாவின் 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்.

 116 மாவட்டங்கள்

116 மாவட்டங்கள்

அதன்படி, இந்த 6 மாநிலங்களில் சொந்த ஊர் திரும்பி வரும் தொழிலாளர்களின் புனர்வாழ்வு, வேலைவாய்ப்புக்கு ஒரு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது... 116 மாவட்டங்களிலும், மத்திய அரசின் சமூக நலனும், நேரடியான பலன் தரும் திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும்... இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரப்படும்.. சுருக்கமாக சொன்னால், திறன் மேம்பாடு, நலத்திட்டங்களின் பயன்கள் இவர்கள் எல்லாரையுமே போய் சேர வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் உறுதியாக எண்ணமாக உள்ளது.

 அறிவிப்புகள்

அறிவிப்புகள்

இப்படி புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 8 கோடி பேர் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்படுகிறது.. இவர்களுக்கான அறிவிப்புகளும், சலுகைகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், இந்த வேலைவாய்ப்பும், வாழ்வாதாரத்துக்கான அடிப்படை திட்டமானது அவர்களுக்கு மேலும் நேரடி பலனை தரும்.. அனைத்து அமைச்சகங்களும் இந்த திட்டத்திற்கான வரைவை தயார் செய்ய முனைந்துள்ளன.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு 2 வாரங்களுக்குள், திட்டங்களின் வரைவுகள் தயாரிக்கப்பட்டு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைதவிர, சுய சார்புடைய பாரதம் என்ற திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சிறு தொழில்களின் தேவைக்கேற்ப புலம்பெயர்ந்த இளம் வயது தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளது... இதன்மூலம் திறமையான தொழிலாளர்கள் இந்தியாவுக்கு வருங்காலத்தில் தயாராகலாம்.

 வரவேற்பு

வரவேற்பு

எனவே மத்திய அரசின் இந்த புதிய திட்டம் மக்களை ஈர்க்க தொடங்கி உள்ளது.. இந்த தொழிலாளர்களுக்கு எல்லாம் சொந்த ஊரிலேயே நிரந்தரமான வேலை கிடைத்துவிட்டால், புலம்பெயர வேண்டிய அவசியமே இல்லை.. சொந்த ஊரிலேயே ஜம்மென்று இருக்கலாம்.. அந்த வகையில் மத்திய அரசின் இந்த திட்டம் பெருத்த வரவேற்பை நிச்சயம் பெறும்!

English summary
migrant workers: mega scheme for migrant workers, the gov. has announced
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X