டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் - விவசாயிகளுக்கு மோடி உறுதி

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் அதை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச விவசாயிகள் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கடந்த 23 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் சில விவசாயிகள் குளிரை தாங்காமல் மரணமடைந்துள்ளனர்.

Minimum Price For Crops Will Stay in agricultural products says Modi

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் மத்திய பிரதேச விவசாயிகள் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, முந்தைய அரசு, பருப்பு வகைகளை கொள்முதல் செய்யாத நிலையில் அதனை பாஜக அரசு செய்து வருவதாக குறிப்பிட்டார்.

விவசாயிகளையும், வியாபாரிகளையும் இணைக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றார். விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் வேளாண் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் 35 லட்ச விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளையும் வியாபாரிகளையும் இணைக்கும் வகையில், வேளாண் சட்டங்கள் உள்ளதாக கூறினார்.

லஞ்சம் வாங்கி கட்டுக்கட்டாக பணம் சேர்த்த பாண்டியன் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடிலஞ்சம் வாங்கி கட்டுக்கட்டாக பணம் சேர்த்த பாண்டியன் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் வேளாண் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார். விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளோம். வேளாண் சட்டங்கள் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டாம். நலமுடன் இருந்தால் போதும்.

தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயத்துறை விவசாயிகள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் பிரச்னையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளின் நலன் குறித்து எப்போதும் எதிர்கட்சிகள் சிந்திப்பதே இல்லை என்றும் குற்றம் சாட்டிய பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே தருவார்கள் ஆனால் ஆளும்கட்சி மட்டும்தான் அதை நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

English summary
New agri laws haven't come overnight; parties, experts, progressive farmers for long demanded reforms: PM Narendra Modi at farm meet. If we'd to remove MSP, why would we implement Swaminathan Commission report? Our govt is serious about the MSP, that's why we declare it before sowing season every year. This makes it easy for farmers to make calculations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X