டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியை கிண்டல் செய்தாரா நிதின் கட்கரி?.. ராகுல் வைரல் டிவிட்.. நிதின் நெத்தியடி பதில்!

இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியது தற்போது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ட்வீட் செய்த ராகுல்... பதிலடி கொடுத்த நிதின் கட்கரி- வீடியோ

    டெல்லி: இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியது தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இது தற்போது நிதின் கட்கரிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை போரை உருவாக்கி உள்ளது.

    பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் கடந்த சில நாட்களாக கொஞ்சம் வெளியே வந்துள்ளது. பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக 2019 தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

    இந்த நிலையில் நிதின் கட்கரியும் அதற்கு ஏற்றபடி பாஜகவிற்கு எதிராக மறைமுகமாக பேசி வருவதாக காங்கிரஸ் கூறுகிறது. நிதின் கட்கரி பேசுவது எல்லாம் எதோ ஒரு வகையில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்தாகவும் பார்க்கப்படுகிறது.

    நிதின் கட்கரி பிரதமர்

    நிதின் கட்கரி பிரதமர்

    சமீப காலமாக பாஜகவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக முன்னிறுத்தப்படுகிறார் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. முக்கியமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி ''தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். பொய்களை கூற கூடாது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்களை மக்கள் அடிப்பார்கள்'' என்று கூறி இருந்தார். அவர் மோடியைத்தான் சுட்டிக்காட்டுகிறார் என்று அப்போதே சர்ச்சை எழுந்தது.

    நிதின் பேசியது

    நிதின் பேசியது

    இந்த நிலையில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன் பேசிய நிதின் கட்கரி ''மாணவர்கள் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முதலில் குடும்பத்தை காக்க வேண்டும். குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியாதவர்களால், நாட்டை காப்பாற்ற முடியாது'' என்று கூறினார். நிதின் கட்கரி பிரதமர் மோடி அவரின் மனைவியை விட்டு பிரிந்ததை சுட்டிக்காட்டி இப்படி பேசியதாக மீண்டும் சர்ச்சை உருவானது.

    ராகுல் என்ன சொன்னார்

    இந்த நிலையில் இதில் தலையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ''அட வாழ்த்துகள்.. பாஜகவில் உங்களுக்கு மட்டும்தான் கொஞ்சம் தைரியம் இருக்கிறது. நீங்கள் பேசியது போலவே, ரபேல் ஊழல், அனில் அம்பானி, விவசாயிகள் பிரச்சனை, ஜனநாயகத்தை அழித்தது குறித்தும் பேசுங்கள்'' என்று கிண்டலாக கூறி இருந்தார்.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இதற்கு தற்போது நிதின் கட்கரி பதில் அளித்து இருக்கிறார். அதில், ''ராகுல் காந்தி, எனக்கு உங்களின் சான்று ஒன்றும் தேவையில்லை. நீங்கள் ஒரு கட்சியின் தேசிய தலைவர் ஆன பின் கூட ஒரு திரிக்கப்பட்ட செய்தியை எப்படி நம்புகிறீர்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது'' என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

    English summary
    Minister Nitin Gadkari clarifies the reports on his speech against PM after Rahul Gandhi's tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X