டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமரானார் மோடி.. அமைச்சர்களாகிய அமித்ஷா-ஜெய்சங்கர்.. அமைச்சர்கள் பட்டியல்.. முழுவிவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பட்டியல்

    டெல்லி: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றார் அவரையும் சேர்த்து அவரது அமைச்சரவையில் மொத்தம் 58 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்டஇடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கட்டில் அமர்ந்துள்ளது. இதில் பாஜக மட்டுமே சென்ற முறையைவிட மிக அதிகமாக அதாவது 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது.

    Ministers list of narendra modis new cabinet in india

    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் 9 தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் என மொத்தம் 58 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகிய 2 பேர் அமைச்சராகி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 58 அமைச்சர்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

    மோடி சர்கார்... ஹர்ஷ் வர்த்தன் மீண்டும் மத்திய அமைச்சரானார் மோடி சர்கார்... ஹர்ஷ் வர்த்தன் மீண்டும் மத்திய அமைச்சரானார்

    கேபினட் அமைச்சர்கள்

    1. நரேந்திர மோடி - பிரதமர்
    2. அமித் ஷா
    3. ராஜ்நாத் சிங்
    4. நிதின் கட்காரி
    5. சதானந்த கவுடா
    6. நிர்மலா சீதாராமன்
    7. ராம் விலாஸ் பஸ்வான்
    8. நரேந்திர சிங் தாமோர்
    9. ரவி ஷங்கர் பிரசாத்
    10. ஹர்ஷிம்ராத் கௌர் படேல்
    11. எஸ். ஜெய்சங்கர்
    12. ரமேஷ் நிஷாங் போக்ரியால்
    13. தவார் சந்த் கெலாட்
    14. அர்ஜுன் முண்டா
    15. ஸ்மிருதி இராணி
    16. டாக்டர் ஹர்ஷ் வர்தன்
    17. பிரகாஷ் ஜவடேகர்
    18. பியூஸ் கோயல்
    19. தர்மேந்திர பிரதான்
    20. முக்தார் அபாஸ் நக்வி
    21. பிரல்காத் ஜோஷி
    22. மகேந்திர நாத் பாண்டே
    23. அரவிந்த் ஸாவந்த்
    24. கிரிராஜ் சிங்
    25. கஜேந்திரா சிங் ஷெகாவத்

    தனிபொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள்
    26. சந்தோஷ் கங்க்வார்
    27. ராவ் இந்திரஜித் சிங்
    28. ஸ்ரீபாத் நாயக்
    29. ஜிதேந்திர சிங்
    30. கிரண் ரிஜு
    31. பிக்லாத் சிங் படேல்
    32. ஆர்கே சிங்
    33. ஹர்தீப் சிங் பூரி
    34. மன்சுக் மாண்டாவியா

    இணையமைச்சர்கள்
    35. பஹான் சிங் குலசேத்
    36. அஸ்வினி சௌபே
    37. முன்னாள் ராணுவ தளபதி விகே சிங்
    38. கிஷான் பால் குஜார்
    39. தன்வே ராவ்ஹாகேப் தாதாராவ்
    40. ஜி. கிஷான் ரெட்டி
    41. பர்ஷோத்தம் ரூபலா
    42. ராம்தாஸ் அத்வாலே
    43. சாத்வி நிரஞ்சன் ஜோதி
    44. பபுல் சுப்ரியா
    45. சஞ்சீவ் குமார் பல்யான்
    46. தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ
    47. அனுராக் சிங் தாகூர்
    48. அன்காடி சுரேஷ் சன்னபாசப்பா
    49. நித்யாத் ராஜ்
    50. வி. முரளீதரன்
    51. ரேணுகா சிங் சருதா
    52. சோம் பிரகாஷ்
    53. ரமேஷ்வர் தெலி
    54. பிரதாப் சந்த்ரா சாரங்கி
    55. கைலாஷ் சௌத்ரி
    56. தபேஸ்ரீ சௌத்ரி
    57. அர்ஜுன்ராம் மேக்வால்
    58. ரத்தன் லால் கட்டாரியா

    மேல உள்ள பட்டியல் வியாழக்கிழமை இரவு வரை மத்திய அமைச்சராக பதவியேற்றோர் பட்டியல் ஆகும். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு வெளியாகும்.

    English summary
    New Ministers list of narendra modi's new cabinet in india. Their portfolios will be updated once they have been officially allocated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X