டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் 20 முதல் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் திறக்க அனுமதி.. ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல!

Google Oneindia Tamil News

டெல்லி: ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவின் போது மளிகைக் கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள், இறைச்சிக் கடைகள் திறந்திருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாக நேற்றுடன் முடியவிருந்த லாக்டவுன் தற்போது மே 3 -ஆம் தேதி வரை தொடர்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாடிய போது கூறியிருந்தார்.

Ministry of Home Affairs released guidelines today about vegetable shops

அதன்படி தற்போது மத்திய அரசு அதுகுறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20 இல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பின்னர் விவசாயம், தோட்டக் கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி. ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

ஏப்ரல் 20 முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். ஆனால் முகக் கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறார்கள். அது போல் கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. நெடுஞ்சாலையோர ஓட்டல்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு... ஏப்.20 முதல் அமல்ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு... ஏப்.20 முதல் அமல்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளது. அது போல் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவின் போது மளிகைக் கடைகள், பழக் கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் திறந்திருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே வேளையில் எல்லா இடங்களிலும் இந்த கடைகள் திறந்திருக்காது என்பதை உணர்த்தும் வகையில் மத்திய அரசு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என்பதுதான். எனவே கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படும் என்றே தெரிகிறது.

English summary
MHA guidelines released today, saying whether vegetables, fruits shops will be opened or not?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X