டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொத்து குவிப்பு புகார்.. பீலா ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு மத்திய அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது எழுந்துள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    சொத்துக்குவிப்பு புகார்.. Beela Rajesh மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

    நாகர்கோவிலை சேர்ந்தவர் பீலா ராஜேஷ். மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இவர் ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1997-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர் பீலா ராஜேஷ்.

    Ministry of Personnel orders Chief Secretary to take action against Beela Rajesh

    இவர் இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றி பின்னர் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார். மீன்வளத் துறை இயக்குநராக இருந்த இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    இது கன்னட, தெலுங்கு, மலையாள மொழியினருக்கு செய்யும் திராவிட துரோகம்.. சொல்கிறார் எச். ராஜாஇது கன்னட, தெலுங்கு, மலையாள மொழியினருக்கு செய்யும் திராவிட துரோகம்.. சொல்கிறார் எச். ராஜா

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் திடீரென அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் வருவாய் துறை செயலாளராகவும் இருந்த ஜெ ராதாகிருஷ்ணனை சுகாதாரத் துறை செயலாளராக தமிழக அரசு நியமித்தது.

    Ministry of Personnel orders Chief Secretary to take action against Beela Rajesh

    இந்த நிலையில் பீலா ராஜேஷை வருவாய் துறை செயலாளராக மாற்றியது. மேலும் கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பு அதிகாரியாகவும் உள்ள பீலா ராஜேஷ் மீது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி மதிப்பில் சொத்து குவித்ததாக கடந்த ஜூன் 25-ஆம் தேதி புகார் எழுந்துள்ளது.

    பீலா வாங்கியதாக சொத்துகளின் பட்டியலை இணைத்து தரப்பட்ட இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Ministry of Personnel orders TN Chief Secretary to take action against Beela Rajesh regarding disproportionate assets.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X