டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கி.மீ.க்கு 4 பைசா வரை உயர்த்தப்பட்டது ரயில் கட்டணம்.. நள்ளிரவு 12 மணி முதல் அமல்.. ரயில்வே அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: புத்தாண்டு முதல் ரயில்வே புது கட்டணங்களுடன் பயணிகளை வரவேற்கிறது. ரயில் கட்டணங்கள் உயர்வு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு ரயில் கட்டணங்கள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

Ministry of Railways revises the basic passenger fare

ரயில்வேயின் அறிவிப்புப்படி புறநகர் ரயில் சேவைகளுக்கான கட்டணத்தில், எந்த மாற்றமும் இல்லை. அதே நேரம், சாதாரண ஏசி வசதி இல்லாத பெட்டிகளுக்கான, கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான ஏசி வசதி இல்லாத பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏசி வசதி இல்லாத முதல் வகுப்பு, 2வது வகுப்பு, படுக்கை வசதி பெட்டிகளுக்கு இது பொருந்தும். ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 4 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏசி சேர் கார், 3வது வகுப்பு ஏசி, 2வது வகுப்பு ஏசி, முதல் வகுப்பு ஆகியவை 4 பைசா கட்டண வரம்புக்குள் வரும்.

சட்டசபை கூடும் ஜன.6ம் தேதி.. முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் முக்கிய கூட்டம்சட்டசபை கூடும் ஜன.6ம் தேதி.. முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் முக்கிய கூட்டம்

சதாப்தி, ராஜ்தானி மற்றும் டொரோண்டோ போன்ற பிரீமியம் ரயில்களும், இந்த ரயில் கட்டண உயர்வுக்குள் வருகின்றன. ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களில் மாற்றமில்லை. அதிவிரைவு ரயில்களுக்கான கூடுதல் கட்டண விவரங்களிலும் மாற்றமில்லை. ஏற்கனவே, முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தாது. இவ்வாறு ரயில்வே துறை தனது தகவலில் தெரிவித்துள்ளது.

உதாரணத்திற்கு, 1,447 கி.மீ தூரம் கொண்ட டெல்லி-கொல்கத்தா வழித்தடத்தில் ஒருவர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு கி.மீ.க்கு 4 பைசா என்ற கட்டண உயர்வு காரணமாக, மொத்த கட்டணத்தில், சுமார் 58 ரூபாய் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை முதல் கோவை வரையிலான ஏசி வசதி கொண்ட ரயிலில் பயண கட்டணம் சுமார் ரூ.20 அதிகரிக்கலாம், சென்னையிலிருந்து, நெல்லைக்கான கட்டணம் எனில் ரூ.25 வரை அதிகரிக்க கூடும்.

English summary
Ministry of Railways revises the basic passenger fare as per revised passenger fare table published by Indian Railway Conference Association (IRCA), effective from January 1, 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X