• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"ப்ளீஸ் நக்சல் அங்கிள், அப்பாவை விட்டுருங்க.." உருகும் சிஆர்பிஎப் வீரர் மகள்.. கலங்க வைக்கும் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: "ப்ளீஸ் நக்சல் அங்கிள்.. எனக்கு எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும். அவரை தயவு செய்து எங்கள் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்.." என்று கண்களில் கண்ணீர் மல்க சிஆர்பிஎப் படைவீரர் ராகேஸ்வர் சிங் மன்காஸ், மகள் பேசுவதை பார்க்கும் போது யாராக இருந்தாலும் அவர்களது மனது கரைந்துவிடும்.

சட்டீஸ்கர் மாநிலம் பீஜாப்பூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் திடீரென நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த ஜம்மு பகுதியை சேர்ந்த ராகேஸ்வர் சிங் என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை கடத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ராகேஸ்வர் சிங் மகள் இதுபோல அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Missing CRPF Jawans Daughter Makes Emotional Appeal for His Release to Maoist

இத்தனைக்கும் ஏப்ரல் 15ஆம் தேதி குடும்பத்தில் நடைபெற இருந்த ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக ராகேஷ் வருவதாக இருந்தது. அதற்குள்ளாக இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதை நினைத்து ஒட்டு மொத்த குடும்பமும் கலங்கி போயிருக்கிறது. வெகு தூரத்தில் இருந்த சொந்த பந்தங்கள் கூட இப்போது ராகேஷ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபடி இருப்பதை பார்க்க முடிகிறது.

இதுபற்றி ராகேஷ் சிங் மனைவி, நிருபர்களிடம் கூறுகையில், நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல் சம்பவம் பற்றி செய்தியை படித்ததும் உடனடியாக எனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு செல்லவில்லை. எனவே உடன் பணியாற்றும் நண்பர்கள் சிலருக்கு போன் செய்து கேட்டேன் அவர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு, ராகேஷ் எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்று கூறினார்.

ஆனால் திடீரென பிஜாபூர் பகுதியிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு நிருபர் என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். எனது கணவரை மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருப்பதாகவும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை பேசி தனக்கு அனுப்புங்கள் என்று சொன்னார். நானும் அதை அனுப்பி வைத்தேன். ஆனால் எங்கோ உள்ள ஒருவருக்கு எனது தொலைபேசி எண் எப்படி கிடைத்தது என்பது புரியவில்லை இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அழுகையோடு கூறுகிறார் ராகேஷ்வர் சிங் மனைவி.

இந்த நிலையில்தான் ராகேஷ்வர் சிங்கின், 5 வயது மகள் அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். எனது அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். பிளீஸ் நக்சல் அங்கிள். அவரை விட்டு விடுங்கள். எங்கள் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். இந்த தேவதை தனது அப்பாவை ரொம்ப மிஸ் செய்கிறாள், என்று கூறுகிறார்.

இதை கேட்டதும் அவரது குடும்பத்தில் உள்ள அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. யாருக்காகவோ, இல்லையோ, இந்த சிறுமிக்காக அவரது தந்தை விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் கோரிக்கையாக இருக்கிறது.

அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் பிடியில் இருந்து எப்படி மீட்கப்பட்டாரோ, அதுபோல தனது கணவரை நக்சல் பிடியிலிருந்து மீட்க வேண்டுமென்று ராகேஸ்வர் சிங் மனைவி மீண்டும் மீண்டும் கூறுவதை மத்திய அரசு பரிசீலிக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் அந்த குடும்பம் தவித்துக் கொண்டிருக்கிறது.

English summary
It was a tearjerker moment at missing CRPF soldier Rakeshwar Singh Manhas’s house when his 5-year-old daughter made an emotional appeal for her father’s release from Maoist captivity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X