டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திரயான் 2வே இன்னும் முடியல.. அதுக்குள்ள அடுத்த திட்டமா? விமானப்படை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட ககன்யான் திட்டத்திற்கு தற்போது ஆள் எடுக்கப்பட உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Last 15 minutes are the most crucial time for Chandrayaan-2

    டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட ககன்யான் திட்டத்திற்கு தற்போது ஆள் எடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பெங்களூரில் தொடங்கி உள்ளது.

    இந்தியாவின் சந்திரயான் 2 திட்டம் தற்போது வெற்றிக்கு மிக அருகில் உள்ளது. இன்று நள்ளிரவில் நிலவிற்கு மிக அருகில் சந்திரயான் 2 சென்றுவிடும். நாளை அதிகாலை நிலவில் சந்திரயான் 2 இறங்கிவிடும்.

    இந்த நிலையில் தற்போது இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதற்காக இஸ்ரோ இப்போதே முக்கியமான பணிகளை தொடங்கி உள்ளது.

    அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்

    எப்படி உலகம்

    எப்படி உலகம்

    அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.இந்த நிலையில் தற்போது இஸ்ரோவும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்து உள்ளது.

    பெயர்

    பெயர்

    இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு ககன்யான் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விண்வெளியில் சென்று இந்திய வீரர்கள் மூலம் ஆராய்ச்சி நடத்தப்படும். ஆனால் விண்ணில் எங்கு சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இதன் மூலம் இந்தியா முதன்முதலாக மனிதர்களை சுயமாக விண்ணுக்கு அனுப்ப உள்ளது.

    எத்தனை நாட்கள்

    எத்தனை நாட்கள்

    இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பது குறித்தும் இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

    தேர்வு நடக்கிறது

    தேர்வு நடக்கிறது

    இதற்கான தேர்வுதான் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான புகைப்படத்தை தற்போது இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை வீரர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ சோதனை தற்போது நடந்து வருகிறது.

    எப்படி நடக்கிறது

    எப்படி நடக்கிறது

    அதன்படி பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அமைப்பில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் ரஷ்யாவில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதன்பின் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். ரஷ்யாவில் லியாசான் பயிற்சி மையத்தில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

    வாவ்

    இதற்காக தற்போது இந்திய விமானப்படை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. எப்படி சோதனை நடக்கும், வீரர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று இந்த புகைப்படம் மூலம் தெளிவாகி உள்ளது.

    English summary
    Mission Gaganyaan: ISRO starts its selection for Astronaut to space in Bangalore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X