• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மதுரை மீது ஸ்டாலினுக்கு தனி பாசம்.. டெல்லி செல்லும்போதெல்லாம் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு, மதுரை பற்றிய ஒரு புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.

  பெரிய தலைகளுக்கு MK Stalin கொடுத்த பரிசு | MK Stalin Delhi Visit | Oneindia Tamil

  டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், குடியரசு தலைவர் மாளிகையில் இன்று ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார். அப்போது அவர், தமிழக சட்டசபையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

  வந்தாச்சு அறிவிப்பு.. அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும்.. இந்த 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைவந்தாச்சு அறிவிப்பு.. அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும்.. இந்த 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழை

  இந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்க குடியரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்தார் ஸ்டாலின்.

  குடியரசு தலைவரிடம் வழங்கிய புத்தகம்

  குடியரசு தலைவரிடம் வழங்கிய புத்தகம்

  குடியரசுத் தலைவரை ஸ்டாலின் சந்தித்தபோது அவருக்கு பரிசாக வழங்கிய ஒரு புத்தகம் பற்றி இப்போது அதிகப்படியாக பேசப்படுகிறது. 2007ம் ஆண்டு மனோகர் தேவதாஸ் எழுதி வெளியான Multiple facets of my Madurai என்ற நூலை ஸ்டாலின் பரிசாக வழங்கியுள்ளார். குடியரசு தலைவருடனான தனது முதல் சந்திப்பில் இந்த நுலை ஸ்டாலின் பரிசளித்ததை பலரும் வெகுவாக பாராட்டுவதை கவனிக்க முடிகிறது.

  மதுரை பற்றி புத்தகம்

  மதுரை பற்றி புத்தகம்

  ஏன் இந்த நூல் முக்கியமானது என்று பார்க்கலாம்- மனோகர் தேவதாஸ் எழுத்தாளர் மட்டுமல்ல, ஓவியராகவும் புகழ்பெற்றவர். 1936ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த அவர், தனது எழுத்துக்களோடு அந்த கதை களம் நடக்கும் இடத்தை தத்ரூபமாக ஓவியமாகவும் வரைந்து விடுவார். எனவே படிப்போருக்கு இது அந்த இடத்திற்கே சென்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.

   மதுரைக்கே அழைத்துச் செல்லும் நூல்

  மதுரைக்கே அழைத்துச் செல்லும் நூல்

  2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது மனோகர் தேவதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் வழங்கிய இந்தப் புத்தகத்தில், மதுரையைப் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாது, அழகிய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மதுரையின் அக்கால கட்ட வீதிகளை அப்படியே கண்முன்பாக கொண்டு வருகிறது இந்த நூல். மனோகர் தேவதாஸ், இந்த நூல் மட்டுமின்றி, தி கிரீன் வெல்ஸ் இயர்ஸ், மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி, கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

  விருது பெற்ற நூலாசிரியர்

  விருது பெற்ற நூலாசிரியர்

  மனோகர் தேவதாஸ், இந்த நூல் மட்டுமின்றி, தி கிரீன் வெல்ஸ் இயர்ஸ், மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி, கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

   புத்தகம் தேர்வு

  புத்தகம் தேர்வு

  கலை நயமிக்க மதுரை கோயில்கள் மற்றும் புராதான கட்டடங்களின் கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்கள் ஸ்டாலின் பரிசளித்த நூலில் இடம் பிடித்துள்ளது. மதுரையைப் பற்றிய புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்திருப்பதற்கு மதுரை லோக்சபா உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த புத்தகத்தை தேர்வு செய்ததன் பின்னணியில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்வரின் செயலாளர் உதயச் சந்திரன் உள்ளிட்டோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  ஸ்டாலின் வழக்கம்

  ஸ்டாலின் வழக்கம்

  ஸ்டாலின் முதல்வரான பிறகு தான் சந்திக்கும் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் புத்தகங்களை பரிசாக வழங்குவதை வாடிக்கையாக ஆரம்பித்துள்ளனர். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலில் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றி விவாதித்தார். கோரிக்கை மனுவை வழங்கினார். இதன் பிறகு நேற்று சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் ஸ்டாலின் . அங்கு காங்கிரஸ் சீனியர் தலைவர் மற்றும் சோனியா காந்தியின் மகனான, ராகுல் காந்தியையும் ஸ்டாலின் சந்தித்தார்.

  சோனியா காந்திக்கு புத்தகம்

  சோனியா காந்திக்கு புத்தகம்

  சோனியா காந்திக்கு ஸ்டாலின் கொடுத்த ஒரு புத்தகம் வழக்கமான ஒரு புத்தகம் கிடையாது அது வரலாற்று சிறப்புமிக்க புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் Journey Of A Civilization Indus To Vaigai . தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். சோனியா காந்திக்கு பரிசளிக்க இந்த புத்தகத்தைத் தேர்ந்து எடுத்துக் கொடுத்தது தமிழக முதல்வரின் தனி செயலாளர்களில் ஒருவரான உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகும்.

  மதுரை மீது பாசம்

  மதுரை மீது பாசம்

  இதேபோல பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்தபோது, "செம்மொழி சிற்பிகள்" என்ற புத்தகத்தை ஸ்டாலின் பரிசாக வழங்கினார். மோடியிடம் ஸ்டாலின் அளித்தள்ள மனுவில், 13வது பிரிவில் இடம்பெற்றிருந்த தமிழில் மொழி குறித்த கோரிக்கையில் தமிழை, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கவேண்டும் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார். எனவே அதற்கு பொருத்தமாக இந்த புத்தகத்தை மோடிக்கு ஸ்டாலின் பரிசளித்தார். இப்போது, குடியரசு தலைவருக்கும் புத்தகம் பரிசளித்துள்ளார். அதுவும் மதுரை தொடர்பான புத்தகம்தான். சோனியா காந்திக்கு வழங்கிய புத்தகம், இந்துஸ் டூ வைகை, இப்போது குடியரசு தலைவருக்கு கொடுத்துள்ளது மதுரை. எனவே ஸ்டாலினின் மதுரை பாசத்தை பார்த்து வியந்துபோயுள்ளார்கள் மக்கள்.

  English summary
  Tamil Nadu Chief Minister MK Stalin, who met President Ramnath Kovind at the Presidential Palace in Delhi today, gifted him a book Multiple facets of my Madurai.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X