16 நாடுகளில் கிளை பரப்பிய குரங்கு அம்மை! 250 பேருக்கு நோய் பாதிப்பு! வருகிறதா புதிய தடுப்பூசி..?
டெல்லி : குரங்கு அம்மை பாதிப்புகள் உலகளவில் தொடர்ந்து பதிவாகி வருவதால், மாடர்னா நிறுவனம் குரங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிவதற்கான முன் தயாரிப்பு சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
ராமேஸ்வரத்தில் கதறி துடித்த பெண்! முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த கயவர்கள்! 2 பேரை தூக்கிய காவல்துறை
1958 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இவ்வகை வைரஸுக்கு விஞ்ஞானிகள் குரங்கு பாக்ஸ் என பெயரிட்டனர். பின்னர் இது குரங்கு காய்ச்சல் என மாறியது.

குரங்கு காய்ச்சல் அச்சம்
1970-ஆம் ஆண்டில் தான் மனிதனுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்நிலையில் திடீரென இவ்வகை வைரஸ் பாதிப்பு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவ தொடங்கி பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு தென்பட்டு உள்ளது.

புதிய பாதிப்பு
இதைத் தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவிலும், இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஐரோப்பாவில் குறைந்தது 16 நாடுகளில் 250க்கும் மேற்பட்ட குரங்கு அம்மைத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.பெரும்பாலும் ஸ்பெயின், பிர்த்தானியா, போர்த்துக்கல், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த தொற்றுக்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் பரவல்
இத்தாலியில் குரங்கு அம்மையின் முதல் பாதிப்பு, சமீபத்தில் கேனரி தீவுகளில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பு தற்போது ஏழாக உயர்ந்துள்ளதாகத் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ரோமில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கை ஐந்தாகவும், டஸ்கன் மற்றும் லோம்பார்டியா பகுதிகளில் தலா ஒவ்வொரு தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரங்கு அம்மைக்கு தடுப்பூசி
இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புகள் உலகளவில் தொடர்ந்து பதிவாகி வருவதால், மாடர்னா நிறுவனம், குரங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிவதற்கான முன் தயாரிப்பு சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது உலகளாவிய சந்தையில் மிகவும் பயனுள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு பெயர்போனா கேம்பிரிட்ஜில் உள்ள மாசசூசெட்ஸ் பயோஃபார்மா, திங்களன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குரங்கு காய்ச்சலுக்கான சாத்தியமான தடுப்பூசிகள் குறித்து முதற்கட்ட ஆய்வுகள் குறித்த திட்டங்களை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.