டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு சட்டம் மற்றும் நீதித்துறை உட்பட 3 முக்கிய துறைகள் ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Cabinet Ministers List: மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?.. முழு தகவல்- வீடியோ

    டெல்லி: மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவரான ரவி சங்கர் பிரசாத்திற்கு, சட்டம் மற்றும் நீதித்துறை உட்பட மொத்தம் 3 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனையடுத்து பிரதமராக நேற்று மோடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து மொத்தம் 57 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

    Ravi Shankar Prasad

    பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களின் துறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மோடி அமைச்சரவையில் மீண்டும் பிரதமராக பதவியேற்று கொண்ட ரவி சங்கர் பிரசாத்திற்கு சட்டம் மற்றும் நீதித்துறை, தகவல் தொடர்பு துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன.

    ரவி சங்கர் பிரசாத் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 64 வயதாகிறது. ரவி சங்கர் பிரசாத் அரசியல்வாதி மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும் ஆவார். இவரது மனைவி பெயர் மாயா ரவி சங்கர் பிரசாத்திற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரவி சங்கர் பிரசாத் பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஹான்ஸ், எம்.ஏ. (அரசியல் அறிவியல்) மற்றும் எல்.எல்.பி பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்

    இவரது தந்தை தாகூர் பிரசாத் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தார். மேலும் தாகூர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தின் முன்னணி நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார்.

    ஏன் தோத்தீங்க.. செம டென்ஷனில் அமித்ஷா.. பதில் சொல்ல முடியாமல் திணறிய ஐவர்! ஏன் தோத்தீங்க.. செம டென்ஷனில் அமித்ஷா.. பதில் சொல்ல முடியாமல் திணறிய ஐவர்!

    1980ம் ஆண்டு முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தில் ரவி சங்கர் பிரசாத் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். பின்னர் 1999-ல் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதற்கு பின்னர் கடந்த 2000-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார் ரவி சங்கர் பிரசாத்.

    பீகார் மாநிலத்தில் லாலுவின் ஆட்சியின் போது நடைபெற்ற காவல்நடை தீவனம் தொடர்பான ஊழல் வழக்கில், லாலு பிரசாத் உள்ளிட்ட பலருக்கு எதிராக வாதடிய முக்கிய வழக்கறிஞர் ரவி சங்கர் பிரசாத் ஆவார். அரசியல் வாழ்வில் காலடி எடுத்த வைக்க நினைத்த ரவி சங்கர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார்.

    2000-ம் ஆண்டில் முதலில் எம்பி-யான இவர் 2001ம் ஆண்டி ல் தேசிய ஜனநாயக கூடட்ணி அரசில் நிலக்கரி அமைச்சராக ஆனார். 2002 ஜூலையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2006 ல், அவர் ராஜ்ய சபா உறுப்பினராக மாறியது மட்டுமல்லாமல் பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார். பின்னர் 2012 -ல் அவர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.

    2014ம் ஆண்டு பிரதமர் மோடி, அவருக்கு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றை நிர்வகிக்க ஒன்றுக்கு மேற்பட்ட போர்ட்ஃபோலியோக்களை வழங்கினார். மாநிலங்களவை எம்பியாக இருந்த ரவி சங்கர் பிரசாத்திற்கு பீகார் மாநிலம் பாட்னா சாகிப் பகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய சத்ருகன் சின்ஹாவை, சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ள ரவி சங்கர் பிரசாத்திற்கு சட்டம் மற்றும் நீதித்துறை உட்பட மொத்தம் 3 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The BJP's senior leader, Ravi Shankar Prasada, who has been appointed Union Minister again in the Modi cabinet, has been allotted 3 departments including Law and Justice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X