டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் 15-வது பிரதமராக மோடி பதவியேற்றார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    2 வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மோடி

    டெல்லி: நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

    நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். 1947-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு தொடர்ச்சியாக 17 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து குல்சரிலால் நந்தா 13 நாட்கள் பிரதமர் பதவி வகித்தார்.

    Modi becomes Nations 15th Prime Minister

    இதையடுத்து 3-வது பிரதமராக சுமார் 2 ஆண்டுகாலம் லால் பக்தூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார். 4-வதாக மீண்டும் குல்சரிலால் நந்தா 13 நாட்கள் பிரதமர் நாற்காலியில் இருந்தார்.

    அவருக்குப் பின்னர் சுமார் 11 ஆண்டுகாலம் இந்தியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இந்திரா காந்தி தேசத்தின் பிரதமராக இருந்தார். அவரைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய், சரண்சிங் ஆகியோர் குறுகிய ஆண்டுகள் பிரதமராக இருந்தனர்.

    1980-ம் ஆண்டு மீன்டும் இந்திரா காந்தி பிரதமரானார். 1984-ல் அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் 5 ஆண்டுகாலம் அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமர் நாற்காலியில் இருந்தார். அவரைத் தொடர்ந்து 343 நாட்கள் வி.பி. சிங் பிரதமர் பதவி வகித்தார்.

    டீக்கடை மாஸ்டர் டூ ராஷ்டிரபதி பவன்.. சொல்லி வைத்து வென்று காட்டிய பிரதமர் மோடிடீக்கடை மாஸ்டர் டூ ராஷ்டிரபதி பவன்.. சொல்லி வைத்து வென்று காட்டிய பிரதமர் மோடி

    நாட்டின் 8-வது பிரதமராக சந்திரசேகர், 9-வது பிரதமராக நரசிம்மராவ், 10-வது பிரதமராக வாஜ்பாய் இருந்தனர். இவர்கள் வரிசையில் தேவகவுடா, குஜ்ரால் மீண்டும் வாஜ்பாய் பிரதமராகினர். பின்னர் 10 ஆண்டுகாலம் மன்மோகன்சிங் பிரதமராக தொடர்ந்து பதவி வகித்தார்.

    2014- தேர்தலில் வென்ற மோடி பிரதமரானார். தற்போதைய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற மோடி நாட்டின் 15-வது பிரதமராகி உள்ளார். முன்னதாக குஜராத் மாநிலத்தில் 3 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தார் மோடி.

    மோடி முதல்வராக இருந்த போதுதான் வரலாற்றின் துயரமான குஜராத் இனப்படுகொலை சம்பவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கியது இந்த இனப்படுகொலை சம்பவம்.

    மோடி கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டில் வெறுப்பரசியல் உச்சத்தை அடைந்தது. பசு பாதுகாவலர்கள் தங்களது சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மையினரை படுகொலை செய்த மனிதப் பேரவலம் நடைபெற்றது.

    மோடி ஆட்சிக்காலத்தில் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி அடைந்தது. பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உள்நாட்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது மோடி அரசின் மிகப் பெரும் சர்ச்சையானது. கோடிக்கணக்கான பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதையடுத்து ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் பல லட்சம் சிறுகுறு தொழில்கள் இழுத்து மூடப்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டது.

    English summary
    Narendra Modi was sworn in as India's 15th Prime Minister on Thursday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X