டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார்

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை ஓட்டு எண்ணிக்கை நாளில் ரூ.10 வரை உயர்த்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுபபாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து உள்ளது. இந்த சூழலில் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் ராஜதந்திரத்திலும், பொருளாதாரத்திலும் இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

Modi govt Plans To Hike Fuel Prices By Rs 5-10 On Evening of May 23, accuses Congress

தற்போது எல்லா விஷயத்தையும் துணிச்சலாக பேசும் பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோல், டீசல் விவகாரத்தில் மௌனம் சாதிக்கிறார். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம் 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம்

அதேநேரம் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளின் போது மாலையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தும் திட்டங்கள் நடந்து வருகிறது. மக்களை யாரும் ஏமாற்ற முடியாது" என்றார்.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா விதித்த தடையால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்க கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக 74.31 டாலராக உயர்ந்துள்ளது.

English summary
crude oil price rise: modi govt plan to increase petrol prices By Rs 5-10 On may 23 , accuses Congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X